ஆந்திரம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களுக்குப் புதிய ஆளுநர்களை நியமனம் செய்து, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று (ஜூலை 16) உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஆந்திரப் பிரதேச ஆளுநராக 2009ஆம் ஆண்டிலிருந்து இ.எஸ்.எல்.நரசிம்மன் பதவி வகித்து வந்தார். 2014ஆம் ஆண்டு தெலங்கானா, ஆந்திரம் என இரண்டு மாநிலங்களாகப் பிரிந்த பிறகும் அவர் ஆளுநராக தொடர்ந்து வந்தார். சத்தீஸ்கர் மாநில ஆளுநர் பல்ராம்ஜி தாஸ் டாண்டன் கடந்த ஆண்டு காலமானார். அதையடுத்து, மத்தியப் பிரதேச ஆளுநரான ஆனந்திபென் பட்டேல் சத்தீஸ்கர் ஆளுநராகக் கூடுதல் பொறுப்பு வகித்தார்.
இந்த நிலையில், ஆந்திரம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய இரண்டு மாநிலங்களுக்கும் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பாஜகவின் மூத்த தலைவராகவும், 1980-88களில் ஒடிசாவின் மாநில தலைவராக இருந்தவரான பிஷ்வபுஷன் ஹரிசந்தனை (84), ஆந்திராவின் ஆளுநராகவும், பெண்களுக்கு, குறிப்பாக பழங்குடியின பெண்களின் நீதிக்காக குரல்கொடுத்து வரும் அனுசியா உய்கேய் (62) சத்தீஸ்கர் ஆளுநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று (ஜூலை 16) இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இதேபோல், நேற்று முன்தினம் இமாச்சலப் பிரதேசத்துக்குப் புதிய ஆளுநராக கல்ராஜ் மிஷ்ராவை நியமித்தார் குடியரசு தலைவர்.
**
மேலும் படிக்க
**
**[டிஜிட்டல் திண்ணை: சூர்யாவை தொலைபேசியில் மிரட்டிய அமைச்சர்!](https://minnambalam.com/k/2019/07/16/84)**
**[30-45: தினகரனின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/07/16/18)**
**[ “மாற்று வேட்பாளரை மாற்றுங்கள்”- துரைமுருகனிடம் ஸ்டாலின்](https://minnambalam.com/k/2019/07/16/53)**
**[தயாராகிறது பாகுபலி 3?](https://minnambalam.com/k/2019/07/16/26)**
**[அதிமுக தலைவராகிறாரா ரஜினி?](https://minnambalam.com/k/2019/07/15/18)**
�,”