ஆதிதிராவிடர் பள்ளிகள் பிளஸ்2 தேர்ச்சி சதவிகிதத்தில் பின்தங்கியது ஏன்?

Published On:

| By Balaji

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று மே 12ஆம் தேதி வெளியானது. இதில், ஆதி திராவிடர் நலப் பள்ளிகள், சமூக நலத்துறை பள்ளிகள் மற்றும் ரயில்வே பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் மிகக் குறைந்த சதவிகித அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் மொத்தம் 18 வகையான நிர்வாகப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. அவற்றின் தேர்ச்சி சதவிகிதம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆதிராவிடர் நலப் பள்ளிகளில் மொத்தம் 8111 மாணவர்கள் தேர்வு எழுதினர் இதில், 6,675 மாணவர்கள் தேர்ச்சி பெற்று 82.30 சதவிகித அளவு தேர்ச்சி பெற்றுள்ளது.

ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில் 3792 மாணவர்கள் தேர்வெழுதி 3663 பேர் தேர்ச்சி பெற்று 96.60 சதவிகித அளவு தேர்ச்சி பெற்றுள்ளது.

ஐசிஎஸ்இ பள்ளிகளில் 3243 மாணவர்கள் தேர்வெழுதி 3144 பேர் தேர்ச்சி பெற்று 97.22 சதவிகித அளவு தேர்ச்சி பெற்றுள்ளது.

கண்டோன்மெண்ட் பள்ளிகளில் 106 மாணவர்கள் தேர்வெழுதி 102 பேர் தேர்ச்சி பெற்று 96.23 சதவிகித அளவு தேர்ச்சி பெற்றுள்ளது.

கார்ப்பரேஷன் பள்ளிகளில் 11690 மாணவர்கள் தேர்வெழுதி 10528 பேர் தேர்ச்சி பெற்று 90.06 சதவிகித அளவு தேர்ச்சி பெற்றுள்ளது.

வனத்துறை பள்ளிகளில் 303 மாணவர்கள் தேர்வெழுதி 292 பேர் தேர்ச்சி பெற்று 96.37 சதவிகித அளவு தேர்ச்சி பெற்றுள்ளது.

அரசின் முழு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1,77,868 மாணவர்கள் தேர்வெழுதி 1,68,194 பேர் தேர்ச்சி பெற்று 94.56 சதவிகித அளவு தேர்ச்சி பெற்றுள்ளது.

அரசுப் பள்ளிகளில் 3,68,492 மாணவர்கள் தேர்வெழுதி 2,20,096 பேர் தேர்ச்சி பெற்று 86.97 சதவிகித அளவு தேர்ச்சி பெற்றுள்ளது.

அறநிலையத்துறை பள்ளிகளில் 404 மாணவர்கள் தேர்வெழுதி 370 பேர் தேர்ச்சி பெற்று 91.58 சதவிகித அளவு தேர்ச்சி பெற்றுள்ளது.

கள்ளர் நலத்துறை பள்ளிகளில் 1995 மாணவர்கள் தேர்வெழுதி 1846 பேர் தேர்ச்சி பெற்று 92.53 சதவிகித அளவு தேர்ச்சி பெற்றுள்ளது.

நகராட்சிப் பள்ளிகளில் 9057 மாணவர்கள் தேர்வெழுதி 7897 பேர் தேர்ச்சி பெற்று 87.20 சதவிகித அளவு தேர்ச்சி பெற்றுள்ளது.

சிறுபான்மை மொழிப் பள்ளிகளில் 139 மாணவர்கள் தேர்வெழுதி 139 பேர்களும் தேர்ச்சி பெற்று100 சதவிகித அளவு தேர்ச்சி பெற்றுள்ளது.

அரசின் பகுதி நிதியுதவி பெறும் பள்ளிகளில் 53,296 மாணவர்கள் தேர்வெழுதி 50,963பேர் தேர்ச்சி பெற்று 95.62 சதவிகித அளவு தேர்ச்சி பெற்றுள்ளது.

ரயில்வே பள்ளிகளில் 28 மாணவர்கள் தேர்வெழுதி 22 பேர் தேர்ச்சி பெற்று 78.57 சதவிகித அளவு தேர்ச்சி பெற்றுள்ளது.

சுயநிதி மெட்ரிக் பள்ளிகளில் 2,10,119 மாணவர்கள் தேர்வெழுதி 20,5427 பேர் தேர்ச்சி பெற்று 97.77 சதவிகித அளவு தேர்ச்சி பெற்றுள்ளது.

சுய நிதிப் பள்ளிகளில் 43,447 மாணவர்கள் தேர்வெழுதி 42,474 பேர் தேர்ச்சி பெற்று 97.76 சதவிகித அளவு தேர்ச்சி பெற்றுள்ளது.

சமூக நலத்துறை பள்ளிகளில் 342 மாணவர்கள் தேர்வெழுதி 278 பேர் தேர்ச்சி பெற்று 81.79 சதவிகித அளவு தேர்ச்சி பெற்றுள்ளது.

மலைவாழ் மக்கள் நலத்துறை பள்ளிகளில் 839 மாணவர்கள் தேர்வெழுதி 727 பேர் தேர்ச்சி பெற்று 86.727 சதவிகித அளவு தேர்ச்சி பெற்றுள்ளது.

இதில், ரயில்வே பள்ளிகள், ஆதி திராவிடர் நலப் பள்ளிகள், சமூக நலத்துறை பள்ளிகள், மலைவாழ் மக்கள் பள்ளிகள் மிகக் குறைந்த அளவே தேர்ச்சி சதவிகிதத்தைப் பெற்றுள்ளனர். இந்த துறை பள்ளிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதி முழுமையாக செலவிடப்பட்டதா? இந்த மாணவர்களின் தேர்ச்சி சதவிகிதத்தை உயர்த்த இப்பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழக அரசு இனியாவது, கல்வியில் பின் தங்கிய ஆதி திராவிடர் மற்றும் மலைவாழ் மக்கள் பள்ளிகளில் தேர்ச்சி சதவிகிதத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இந்த மக்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share