ஆட்சி முடிந்த மறு நிமிடம் ரஜினி கட்சி: தமிழருவி

Published On:

| By Balaji

தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முன்பான கால கட்டத்தில் அப்துல் கலாமின் அரசியல் ஆலோசகர் பொன்ராஜ், சென்னையின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி போன்றோரை சந்தித்துப் பேசிய ரஜினிகாந்த் அரசியல் ரீதியாக சில ஆலோசனைகளை நடத்தினார்.

ஆன்மீக அரசியல் தளத்தில் பாஜகவுடன் செயல்படலாமா என்ற திட்டத்தை, தமிழகத்தில் தேர்தல் முடிவுகளுக்குப் பின் ரஜினி மாற்றிக் கொண்டிருக்கிறார் என்பதையும் மே 25 ஆம் தேதி மின்னம்பலத்தில் வெளியான [டிஜிட்டல் திண்ணை](https://minnambalam.com/k/2019/05/24/93) பகுதியில் வெளியிட்டிருந்தோம்.

இந்நிலையில் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் தனது ஆஸ்தான அரசியல் ஆலோசகரும் நீண்ட நாள் நண்பருமான காந்திய மக்கள் கட்சித் தலைவர் தமிழருவி மணியனுடன் ஆலோசனை நடத்தியிருக்கிறார் ரஜினி. பாஜகவுடன் ரஜினி போக வேண்டாம் என்று அவரை தொடர்ந்து வற்புறுத்தி வருகிறவர் தமிழருவி மணியன்.

தேர்தல் முடிவுக்குப் பின் ரஜினியிடம் நடத்திய ஆலோசனை குறித்து தமிழருவி மணியனிடம் மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரி சார்பாகக் கேட்டோம்.

“ரஜினி அரசியலுக்கு வருவாரா, எப்போது வருகிறார், எப்படி வருகிறார் என்ற கேள்விகள் எல்லாம் தேவையில்லை. அவர் அரசியலுக்கு நிச்சயமாக வருகிறார். சட்டமன்றத் தேர்தலுக்கு வருவதாக அவர் ஏற்கனவே கூறியிருக்கிறார். எடப்பாடி ஆட்சி முடிந்த அடுத்த நிமிடமே ரஜினி கட்சி ஆரம்பித்துவிடுவார். சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவார்” என்று அழுத்தம் திருத்தமாக கூறினார் தமிழருவி மணியன்.

.

.

**

மேலும் படிக்க

**

.

.

**

[அமமுக தோல்விக்கான காரணங்கள்: அறிக்கை அனுப்பிய நிர்வாகிகள்!](https://minnambalam.com/k/2019/05/27/15)

**

.

**

[தலித்திய தனிமைப்படுதல் என்னும் அபாயம்!](https://minnambalam.com/k/2019/05/27/17)

**

.

.

**

[ரயில்வே இணையமைச்சர் ஆகிறார் ரவீந்திரநாத்?](https://minnambalam.com/k/2019/05/26/55)

**

.

**

[அதிமுகவில் ராஜ்யசபா ரேஸ்!](https://minnambalam.com/k/2019/05/26/52)

**

.

.

**

[வரப் போகும் நாட்கள் கடினமானவை: சோனியா](https://minnambalam.com/k/2019/05/27/18)

**

.

.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share