]ஆட்சியமைக்க உரிமை கோருகிறார் மோடி

Published On:

| By Balaji

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியமைக்க நரேந்திர மோடி உரிமை கோரவுள்ளார்.

ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடந்த 17ஆவது மக்களவையைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 303 தொகுதிகளை வென்று இரண்டாவது முறையாக தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது. ஜூன் 3ஆம் தேதியோடு 16ஆவது மக்களவை காலாவதியாகவுள்ள நிலையில் மே 24ஆம் தேதி அமைச்சரவையைக் கலைத்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டுள்ளார். 16ஆவது மக்களவை கலைக்கப்பட்டுள்ளதாக இன்று (மே 25) ராஷ்டிரபதி பவன் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் வேலூர் தவிர்த்து 542 தொகுதிகளுக்கு நடந்த இத்தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் பட்டியலை தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில் தேர்தல் ஆணையர்கள் அசோக் லவசா, சுசில் சந்த்ரா இணைந்து இன்று குடியரசுத் தலைவரிடம் வழங்கியுள்ளனர். பாஜக வேட்பாளர்கள் 303 பேரும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 52 பேரும், திமுக வேட்பாளர்கள் 23 பேரும், திருணமூல் காங்கிரஸ் மற்றும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸைச் சேர்ந்த தலா 23 வேட்பாளர்களும், சிவசேனா வேட்பாளர்கள் 18 பேரும், ஐக்கிய ஜனதா தளம் வேட்பாளர்கள் 16 பேரும், பிஜு ஜனதா தளம் வேட்பாளர்கள் 12 பேரும், பகுஜன் சமாஜ் வேட்பாளர்கள் 10 பேரும் வெற்றி பெற்றுள்ளனர். மற்ற அனைத்துக் கட்சிகளும் ஒற்றை இலக்கத்தில்தான் வெற்றி பெற்றுள்ளன. சுயேச்சைகள் 4 பேர் வென்றுள்ளனர்.

இந்நிலையில் இன்று நடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் நாடாளுமன்றக் குழு தலைவராக நரேந்திர மோடி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஷிரோமி அகாலிதளம் கட்சியைச் சேர்ந்த பர்காஷ் சிங் மோடியை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்றக் குழு தலைவராக முன்மொழிய, ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே வழிமொழிந்தனர். நாட்டின் புதிய பிரதமராக மீண்டும் நரேந்திர மோடியை ஒருமனதாகத் தேர்ந்தெடுத்ததற்காக தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பாக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்பிகளுக்கு பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா நன்றி தெரிவித்தார். டெல்லியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி கால்களில் விழுந்து பிரதமர் மோடி ஆசிர்வாதம் பெற்றார். இக்கூட்டத்தில் தேனி தொகுதியில் வெற்றி பெற்ற ஓ.பி.ரவீந்திரநாத்தும் கலந்துகொண்டார்.

வெற்றி பெற்ற வேட்பாளர்களின் விவரங்களை தேர்தல் ஆணையர்கள் குடியரசுத் தலைவரிடம் வழங்கியுள்ள நிலையில், இன்று இரவு 8 மணிக்கு மோடி குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரவுள்ளார்.

.

.

**

மேலும் படிக்க

**

.

.

**

[டிஜிட்டல் திண்ணை: அரசியலில் ரஜினி, கமலை இணைக்க இளையராஜா முயற்சி!](https://minnambalam.com/k/2019/05/24/93)

**

.

**

[ஓ.பன்னீரின் ‘பொதுச் செயலாளர்’ திட்டம்: அதிர்ச்சியில் எடப்பாடி](https://minnambalam.com/k/2019/05/25/30)

**

.

**

[மத்திய அமைச்சராகிறார் ஹெச்.ராஜா?](https://minnambalam.com/k/2019/05/225/55)

**

.

.

**

[மகனுக்கு கப்பல் துறை கேட்கும் பன்னீர்?](https://minnambalam.com/k/2019/05/25/25)

**

.

**

[தேர்தல் முடிவு: தினகரனுக்கு மருத்துவர்கள் பரிசோதனை!](https://minnambalam.com/k/2019/05/25/20)

**

.

.

.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share