அமலா பால் நடித்துள்ள ஆடை திரைப்படம் ஜூலை 19ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் அப்படத்துக்கு தடை விதிக்கக் கோரி புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மேயாத மான் படத்தை தொடர்ந்து ரத்னகுமார் இயக்கும் இப்படம் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது. காமினி என்னும் கதாபாத்திரத்தில் அமலாபால் நடித்திருக்கிறார்.
படத்தின் டீசர், போஸ்டர்கள் வெளியானதிலிருந்தே சர்ச்சைகள் எழுந்துவந்தன. இதில் அமலா பால் நிர்வாணமாக நடித்த காட்சி டீசரில் இடம்பெற்றிருந்தது. அதனால் விஜய் சேதுபதியுடன் நடித்துக் கொண்டிருந்த படத்திலிருந்து அமலா பால் நீக்கப்பட்டார். ஆணாதிக்க மனநிலையில் தயாரிப்பு நிறுவனங்கள் நடந்துகொள்வது தமிழ்த் திரையுலகிற்கு நல்லதல்ல என்ற அமாலா பாலின் அறிக்கை விவாதப் பொருளானது.
சர்ச்சைக்குரிய அந்தக் காட்சிகளைத் தாங்கியுள்ள போஸ்டர்கள் இணையத்தில் பரவலாக கவனம் பெற்றுள்ளன. இந்த போஸ்டர்களை விளம்பரங்களில் பயன்படுத்தக்கூடாது எனவும் இத்தகைய படங்களை தடை செய்ய வேண்டும் என்றும் அனைத்து அரசியல் மக்கள் கட்சித் தலைவர் ராஜேஸ்வரி பிரியா என்பவர் டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அதில், சமுதாயத்தை சீரழிக்கும் விதத்தில் ஆடை படத்தில் ஆடையின்றி அமலா பால் நடித்துள்ளார். பாலியல் குற்றங்கள் அதிகரித்துவரும் நிலையில் ஆடை போன்ற படங்களை தடை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரம்யா சுப்பிரமணியன், ஆதிராஜ், விவேக் பிரசன்னா, ரோஹித் நந்தகுமார் உள்பட பலர் நடித்துள்ளனர். பாடகர் மற்றும் மேயாத மான் படத்தின் இசையமைப்பாளரான பிரதீப்குமார் இசையமைக்கிறார். வீ ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது
**
மேலும் படிக்க
**
**[டிஜிட்டல் திண்ணை: சூர்யாவை தொலைபேசியில் மிரட்டிய அமைச்சர்!](https://minnambalam.com/k/2019/07/16/84)**
**[30-45: தினகரனின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/07/16/18)**
**[மணிரத்னம் – நயன்: உருவாகும் வித்தியாசமான கூட்டணி!](https://minnambalam.com/k/2019/07/17/20)**
**[தயாராகிறது பாகுபலி 3?](https://minnambalam.com/k/2019/07/16/26)**
**[ “மாற்று வேட்பாளரை மாற்றுங்கள்”- துரைமுருகனிடம் ஸ்டாலின்](https://minnambalam.com/k/2019/07/16/53)**
�,”