ஆடியும் ஆடையும் தடை செய்ய முடியாதது: அப்டேட் குமாரு

Published On:

| By Balaji

ஆடி மாசம் ஸ்டார்ட் ஆகிட்டதால, அடுத்த 7 வாரத்துக்கு சாப்பாடு செலவு அதிகமாகாதுன்னு கணக்கு பண்றவன் பேச்சுலர். அதுவே, ஆடி மாசம் பொண்டாட்டியை பிரிச்சு வெச்சுருவாங்களேன்னு யோசிச்சா அவன் மேரீட்னு ஒருத்தண்ட அட்வைஸ் பண்ணிக்கிட்டு இருந்தா, ‘டேய் இதை சொல்ற நீயே பேச்சுலர் கிடையாது. எனக்கு அட்வைஸ் பண்றியா?” அப்டின்னு கேட்டுட்டு போறான். டேய் ஒருத்தன் குழந்தையாவே இருக்கணும்னு விருப்பப்பட்டா, அவனை செவுல்லயே ஒண்ணு போட்டு, உன் வாழ்க்கைல கஷ்டம் இருக்கு. பிரச்சினை இருக்கு. ஒரு மாசத்துக்கு அதுல இருந்து சந்தோசமா இருன்னு சொல்ட்டு போறவனை நண்பன்னு சொல்றதா, கடவுள்னு சொல்றதா?

நானும் நீட், நெக்ஸ்ட், அத்தி வரதர்னு நிறைய டாபிக்கை எடுத்து வெச்சேன். ஆனா, என்.ஐ.ஏ பில் பாஸ் பண்ணிட்டதாகவும், அதுல சைபர் குற்றங்களையும் சேர்த்து வெச்சிட்டதாகவும் தெரிஞ்சதும் அப்டியே யூடர்ன் அடிச்சு பிக் பாஸ் பக்கமும், ஆடி மாசத்துப் பக்கமும் திரும்பிட்டேன். அநேகமா, ஆடி போய் ஆவணி வந்தா எந்த பையன் டாப்புல வருவான்னு தெரிஞ்சிடும். சரி, நீங்க போய் அப்டேட்டை படிங்க. நான் போய் பழைய ஃபேஸ்புக் போஸ்டையெல்லாம் அழிச்சிட்டு வர்றேன். அப்டியே ஒரு அக்கா அமலா பால் நடிச்ச ஆடை போஸ்டரை எடுக்கணும்னு கொதிக்கிறாங்களாம். அதையும் என்னன்னு பாத்துட்டு வர்றேன்.

**???????????????????? ????????????????????????????**

ஆடி மாசம் பிரிச்சுடுவாங்கனு வருத்தத்தில் புது மாப்பிள்ளைகள்,

பிரிச்சு கூட்டிட்டு போக மாட்டிக்கிறாங்களேனு வருத்தத்தில் பழைய மாப்பிள்ளைகள்….!

**Sundara Pandiyan**

அத்திவரதர் 17 நாளில் 5 உயிர்களை காவு வாங்கிவிட்டார்…

**எனக்கொரு டவுட்டு ⁉**

4,80,000-க்கு அறிமுகமாகும் ரெட்மி K20 ப்ரோ..!

அப்படி என்ன ஸ்பெஷல்?

போனாவும் யூஸ் பண்ணிக்கலாம், அயர்ன் பாக்ஸாவும் யூஸ் பண்ணிக்கலாம்.

**anbeSelva**

MBBS க்கு நீட் தேர்வை ரத்து செய்யாதவர்கள் MD க்கு மட்டும் ரத்து பண்றாங்க..ஏன்?

ஏன்னா MD அட்மிஷனில் தமிழர்கள்தான் அதிக இடங்களில் செலக்ட் ஆவாங்க?

இனிமே அதை தடுக்கிற மாதிரி புது எக்ஸாம்..

நீட் என்பது தமிழர்களை அவர்களின் திறமையை தண்டிப்பதற்காகவே கொண்டுவரப்பட்டது என்பது புரிகிறதா?

**கோழியின் கிறுக்கல்!!**

‘ஆமாடா, நான் உன்னை தவிட்டுக்கு தான் வாங்கினேன்’ என்று அம்மா கூறினால் அழுபவன் ‘சாதா மகன்’

நாம அந்த அளவுக்கு வொர்த்தா என்று நெகிழ்பவன் ‘தெய்வ மகன்’!!

**உள்ளூராட்டக்காரன்**

அத்தி வரதரை தரிசிக்க குடும்பத்துடன் நெடுநேரம் வரிசையில் காத்திருந்தான்.

சோர்ந்து போன குழந்தை, கையை தலைக்கு வைத்து தூங்கிவிட்டது.

தரிசனம் கிடைத்த மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினான்.

**ரஹீம் கஸ்ஸாலி**

“அப்பா ஓடிவாங்க வானத்திலிருந்து என்னவோ ஊத்துது” என்று ஆச்சர்யமாக சொன்ன குழந்தைகளிடம் தந்தை சொல்லிக்கொண்டிருந்தார், “இதுக்கு பேரு மழை. ஊத்துறதுக்கு பேர்தான் தண்ணீர். இப்ப நம்ம கேப்ஸ்யூலில் சாப்பிடுறோமே அதுதான் இது.

கடைசியா நானூறு வருடங்களுக்கு முன்பு மழை பெய்ததா படிச்சிருக்கேன்”

**A.P.Perumal**

வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடவில்லை என மக்கள் நீதி மய்யம் அறிவிப்பு!

பிக்பாஸ் நடக்குல்ல. அவுகளும் பிஸியா இருக்காகல்ல. பொறவு எங்குட்டு போட்டி போடுவாக?

**Sarcastic Dude**

Classmate ஒருத்தி faceapp லேடி போட்டோ பாத்து உனக்கு பொண்ணு பொறந்தா என் பையனுக்கு கட்டி கொடுக்குறியா சம்பந்தம் பேசுறா..

Me :: காலேஜ்ல அசைன்மெண்ட் எழுதி கொடுக்க சொன்னதுக்கு என்னா சீன் போட்ட இப்போ அய்யய்யோ..நல்ல சம்பந்தம் மிஸ் ஆகுதேனு வயிறு எரியுதா..நல்லா எரியட்டும்.

**சக்திமான்**

ஏசி உள்ளிட்ட 10 அம்சங்கள் இருந்தால் குடும்ப அட்டை சலுகை ரத்து – செய்தி #

நாங்க கஷ்டப்பட்டு சம்பாதிச்சு எல்லாம் வாங்குவோமாம், இவரு நம்மளோட வரி பணத்துல சம்பளம் வாங்கி சொகுசா வாழ்ந்துட்டு நம்மளோட ரேசன் கார்டையே ரத்து செய்வாராம்.

**பழைய சோறு**

மழையை வரைந்து அழித்தேன்

லப்பரில் ஒட்டிக்கொண்டது

கருமேகம்..!

**கோழியின் கிறுக்கல்!!**

பலரின் மன்னிப்பு மன மகிழ்ச்சியை தரும்!

ஒரு சிலரின் மன்னிப்பு மட்டுமே வருத்தத்தை தரும்!!

**ரஹீம் கஸ்ஸாலி**

வாழ்க்கைக்கும் பிரியாணிக்கும் இருக்கும் ஒற்றுமை என்னன்னா?

ரெண்டிலுமே பீஸ் புல்லா இருந்தாத்தான் நல்லாருக்கும்.

**இதயவன்**

ஏசி உள்ளிட்ட 10 அம்சங்கள் இருந்தால் குடும்ப அட்டை சலுகை ரத்து – செய்தி

ஆனால், வரி மட்டும் எல்லோருக்கும் சமம்??!!

**அழகிய கவிதை**

தவறான வழிக்காட்டுதலுக்கு வீழ்ந்துக் கிடப்பதே மேல்….

**நாட்டுப்புறத்தான் **

சிக்கன் மற்றும் முட்டையை சைவ உணவாக அறிவிக்க வேண்டும் – மாநிலங்களவையில் சிவசேனா எம்.பி சஞ்சய் ரவுத்!

அண்ணே… அப்டியே அந்த மாட்டுக்கறியையும்…

**A.P.Perumal**

‘ஆம்னி பேருந்து கட்டணம் உயர வாய்ப்பு!’

இனி ஐம்பது ரூபாய்க்கு பொரிகடலையை வாங்கிட்டு பொடிநடையா ஊருக்கு நடந்துர வேண்டியதுதான்.

**இராசபாளையத்துக்காரன்**

அரசுப் பள்ளிகளில்

காமராஜர் தன் பங்குக்கு மதிய உணவு போட்டார்

எம்ஜிஆர் தன் பங்குக்கு சத்துணவு போட்டார்

கலைஞர் தன் பங்குக்கு வாரம் ஒரு முட்டை போட்டார்

ஜெயலலிதா தன் பங்குக்கு வாரம் 3 முட்டை போட்டார்

எடப்பாடி மட்டும் சும்மாவா தன் பங்குக்கு ஒரு பூட்டைப் போடுகிறார்!

-லாக் ஆஃப்.

**

மேலும் படிக்க

**

**[ அடிக்கப் பாய்ந்த சத்யா – அடக்கிய சேகர்பாபு: சட்டமன்ற காட்சிகள்!](https://minnambalam.com/k/2019/07/18/25)**

**[அத்திவரதர்: வரிச்சியூர் செல்வத்துக்கு பாஸ் கொடுத்தது யார்?](https://minnambalam.com/k/2019/07/18/54)**

**[30-45: தினகரனின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/07/16/18)**

**[மணிரத்னம் – நயன்: உருவாகும் வித்தியாசமான கூட்டணி!](https://minnambalam.com/k/2019/07/17/20)**

**[டிஜிட்டல் திண்ணை: கிராம சபைகளைக் குறிவைக்கும் சூர்யா](https://minnambalam.com/k/2019/07/17/80)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share