`அல் கய்தா எச்சரிக்கை: இந்தியா பதில்!

Published On:

| By Balaji

அல் கய்தாவின் அச்சுறுத்தல்களுக்கு முக்கியத்துவம் காட்டத் தேவையில்லை என்று இந்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக அல் கய்தா அமைப்பு இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது. அல் கய்தா அமைப்பின் தலைவர் ‘காஷ்மீரை மறந்துவிடாதீர்கள்’ என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இந்திய ராணுவத்தின் மீதும் அரசின் மீதும் தொடர்ந்து இடையறா தாக்குதல்களை மேற்கொள்ள காஷ்மீரில் உள்ள முஜாகிதீன்கள் முழு மனதோடு கவனம் செலுத்த வேண்டும் என கருதுகிறேன். அதனால் இந்தியப் பொருளாதாரத்துக்குச் சேதம் விளைவித்து இந்தியாவுக்கு மனிதவளத்திலும், ராணுவ உபகரணங்களிலும் வெகுவான இழப்பை ஏற்படுத்த முடியும்.

காஷ்மீரின் சண்டை என்பது தனிப்பட்ட மோதல் அல்ல, காஷ்மீர் விவகாரம் ஒட்டுமொத்த உலகிலும் வாழும் இஸ்லாமிய சமூக ஜிஹாதின் ஓர் அங்கமாகும். காஷ்மீர், பிலிப்பைன்ஸ், செச்சினியா, மத்திய ஆசியா, ஈராக், சிரியா, அரபு தீபகற்பம், சோமாலியா, துர்கிஸ்தான் ஆகிய இடங்களில் ஜிஹாதை ஆதரிப்பது அனைத்து இஸ்லாமியர்களின் தனிப்பட்ட கடமை என்பதை அறிஞர்கள் வலியுறுத்த வேண்டும். மேலும் மசூதிகள், சந்தைகள் என இஸ்லாமியர்கள் கூடும் இடங்களில் நமது ஆட்கள் தாக்குதல் நடத்தக் கூடாது” என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், அல் கய்தாவின் எச்சரிக்கை தொடர்பாக இந்திய அரசு விளக்கமளித்துள்ளது. நேற்று (ஜூலை 11) வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, அல் கய்தாவின் எச்சரிக்கை குறித்து அவரிடம் கேள்வியெழுப்பினர். அதற்குப் பதிலளித்த ரவீஷ் குமார், “இதுபோல தினமும் நமக்கு ஏராளமான அச்சுறுத்தல்கள் வருகின்றன. அவற்றுக்கெல்லாம் நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென அவசியம் இல்லை. எல்லையில் பாதுகாப்பை உறுதி செய்ய இந்தியப் பாதுகாப்புப் படைகள் போதிய பலத்துடன் இருக்கின்றன” என்று தெரிவித்துள்ளார்.

**

மேலும் படிக்க

**

**[டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினுக்கு எதிராக எடப்பாடிக்கு டெல்லி போட்டுத் தந்த ப்ளான்!](https://minnambalam.com/k/2019/07/11/76)**

**[வைகோவுக்கு இன்னொரு செக்!](https://minnambalam.com/k/2019/07/10/78)**

**[இந்திய அணியின் ‘அந்த மூன்று பேர்’!](https://minnambalam.com/k/2019/07/11/22)**

**[மகனுக்காக வேலூரில் முகாமிட்ட துரைமுருகன்](https://minnambalam.com/k/2019/07/11/21)**

**[இந்திய அணியை வெளியேற்றிய காரணிகள்!](https://minnambalam.com/k/2019/07/11/48)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share