^அராத்து எழுதும் உயிர் மெய் – 2 (நாள் 13)

Published On:

| By Balaji

Art by Alex Gardener

‘ஸிண்ட்ரியாவா?’ என்று சந்தன் வாய் பிளந்தான். ‘ஏண்டா இப்பிடி அலையிற’என்பதுபோல ஷமித்ரா சந்தனை கேவலமாகப் பார்த்தாள்.

‘ஸிண்ட்ரியா வர்றதால நிறையப் பேரை கூப்பிடல. ஜஸ்ட் நாலைஞ்சி பேரைத்தான் கூப்டிருக்கேன். ப்யூர்லீ பிரைவேட் பார்ட்டி’என்றான் விதேஷ்.

நீர்த்தியும், ஜேம்ஸ் கிருஷ்ணனும் அவரவர் வேலையை பார்க்கச் சென்றார்கள்.

‘எப்பிடி ஆர்த்தி உனக்குப் பழக்கம்’என்று சாந்தவி கேட்டாள்.

‘ஃப்யூ டைம்ஸ் க்ளப்ல மீட் பண்ணி இருக்கேன்’என்றான் விதேஷ்.

‘முதன் முதல்ல எப்படி அறிமுகமானா?’ என்று மீண்டும் நோண்டிக் கேட்டாள் சாந்தவி.

‘அன்னிக்கி ஒரு நாள் சாயங்காலம் ஏழு மணி இருக்கும். க்ளப்ல, பார்ல ஸிண்ட்ரியா தனியா ஒக்காந்துட்டு மெதுவா தண்ணி அடிச்சிட்டு இருந்தா. எல்லாரும், வேற ஏதோ மும்முரமா பேசிட்டு இருப்பதுபோல பாவ்லா காட்டினாலும் அவளைத்தான் சைட் அடிச்சிட்டு இருந்தாங்க. நானும்தான்’ என்று சிரித்துக்கொண்டே இடைவெளி விட்டான்.

சந்தன் ஒரு சிகரெட் எடுத்து பற்றவைத்தான்.

‘கொஞ்ச தூரமா போய் குடிடா’என்று ஷமித்ரா கிசுகிசுத்தாள்.

‘இல்ல, பரவால்ல, இங்கயே குடிக்கட்டும். எனக்கும் ஒண்ணு குடுங்க’ என்று கை நீட்டினான் விதேஷ். சிகரெட் பாக்கெட்டை நீட்டினான் சந்தன்.

‘ஓ….இது 555-வா? எங்கே கிடைக்குது?’

‘சில கடைங்கள்ல மட்டும் கிடைக்குது. சொன்னா ஆச்சர்யப்படுவீங்க, இந்த பாக்கெட் நம்மூர் கிங்ஸை விட விலை கம்மி’என்றான் சந்தன்.

‘ஓ…ரியலீ? வெரி நைஸ், பட் எப்பிடீ? ஹௌஸ் இட் பாஸிபிள்’ என்றான் விதேஷ்.

‘சிம்பிள், வெளிநாட்ல இருந்து ட்யூட்டி ஃப்ரீல வாங்கிட்டு வந்து விக்கிறாங்க. நிறைய கடத்தறாங்க. இங்க நம்ம அரசாங்க போடும் எக்கச்செக்க வரியால, நம்ம நாட்டு சிகரட் விலை ஜாஸ்தி. வரி இல்லாத ஃபாரீன் சிகரட் விலை கம்மி’என்றான் சந்தன். சிகரெட் குடிக்காமல் பேசிக்கொண்டு இருப்பதை எண்ணி, பதறி, ஒரு இழுப்பு இழுத்தான்.

‘எல்லா இடத்திலயும் கிடைக்காதே, என்ன பண்ணுவீங்க?’ என்றான் விதேஷ், புகையை நன்கு இழுத்து விட்டு, ‘குட் குட்’என்றான்.

‘கார்டன் கார்டனா வாங்கி வச்சுப்பேன்’என்றான் சந்தன்.

‘ஹலோ, உங்க சிகரெட் கதை போதும், கப்பு தாங்க முடியல. ஸிண்ட்ரியா கதைக்கு வாங்க’என்று ஞாபகப்படுத்தினாள் சாந்தவி.

‘லங்குலக்கு லங்குலக்கு லங்குலே லங்குலே’என பாடல் சத்தம் திடீரென்று ஒலித்தது. திரும்பிப் பார்த்தால், நீர்த்தி டெஸ்டிங்க் என்று சொல்லி, தம்ஸ் அப் சிம்பல் காட்டினான்.

‘இது என்ன பாட்டு, என்ன படம்?’என்றான் விதேஷ்.

‘டிஷ்யூம்னு ஒரு படம், பூமிக்கு வெளிச்சமெல்லாம்னு ஒரு பாட்டு, நல்ல பாட்டு செமையா இருக்கும்’என்றான்.

‘அய்யய்யோ, இவங்கள்ளாம் சம்பூர்ண ராமாயணம் படம் பார்ப்பாங்க போலருக்கு’என்று முகத்தை நெளித்த சாந்தவி, ‘ப்ளீஸ் ஸிண்ட்ரியா கதை கண்டினியூ பண்றீங்களா’ என்றாள்.

‘ம்ம்..ஸிண்ட்ரியா தனியா ஒக்காந்து குடிச்சிட்டு இருந்தாளா, எல்லாம் தெரியாத மாதிரி சைட் அடிச்சிட்டு இருந்தாங்களா…’

‘ஹலோ அதெல்லாம் சொல்லியாச்சி… மொக்கை வேணாம், அடுத்து?’ என்றாள் சாந்தவி.

‘நானும் சைட் அடிச்சிட்டு இருந்தேன்…’

‘இதையும் சொல்லியாச்சி’என்றாள் சாந்தவி.

‘பேரரை கூப்ட்டேன், கிட்ட வந்தான், ஸிண்ட்ரியா யார் கூடயாவது வந்து இருக்காங்களான்னு கேட்டேன்.’

‘இல்ல சார் தனியாதான் வந்து இருக்காங்க’ன்னு சொன்னான்.

‘இரண்டு ரவுண்ட் அடிச்சிருந்தேன். போதையும் நிதானமும் கலவையா கலந்து கபடி விளையாடிட்டு இருக்கும் லெவல். தைரியம் ஏறும். ஆனா போதைல தைரியம் ஏறல, நிஜமாவே தைரியமும் தன்னம்பிகையும் ஏறின மாதிரி இருக்கும் லெவல் அது. உடலிலும் மனசிலும் ஒரு நிதானம் இருக்கும். அதுதான் நம்மளை ஏமாத்திடும்’

‘சரக்குன்னு எழுந்து ஸ்டைலா நடந்து ஸிண்ட்ரியா டேபிள்கிட்ட போனேன். ஹாய்!னு சொல்லிட்டு அவ எதிர்க்க உட்கார்ந்தேன்’

[ நாள் 1](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/1488911412)

[ நாள் 2](http://krypto.in/k/1488997822)

[ நாள் 3](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/1489084215)

[ நாள் 4](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/1489170614)

[ நாள் 5](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/1489257015)

[ நாள் 6](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/1489343413)

[ நாள் 7](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/1489429812)

[நாள் 8](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/1489516226)

[நாள் 9](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/1489602613)

[நாள் 10](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/1489735071)

[நாள் 11](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/1489775415)

[நாள் 12](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/1489861823)�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share