பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா அமைச்சரவையில் முக்கிய இடம் பெறவுள்ளதாக சொல்லப்படும் நிலையில், பாஜகவின் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
பாரதிய ஜனதா கட்சி 303 தொகுதிகளை வென்று தொடர்ந்து இரண்டாவது முறையாக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது. இந்நிலையில் அமைச்சரவையில் யார் யாருக்கு எந்தெந்த துறையை ஒதுக்குவது என்ற பணிகளில் பாஜக தலைமை தீவிரமாக இறங்கியுள்ளது. மே 30ஆம் தேதி மோடி இரண்டாவது முறையாகப் பிரதமராகப் பொறுப்பேற்கவுள்ளார் என்று சொல்லப்படும் நிலையில், அமைச்சரவையில் பாஜக தேசியத் தலைவர் அமித்ஷாவுக்கு முக்கிய இடம் ஒதுக்கப்படவுள்ளதாக அக்கட்சியின் தலைமை வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.
*இந்தியன் எக்ஸ்பிரஸ்* ஊடகத்திடம் பேசிய பெயர் குறிப்பிட விரும்பாத மூன்று பாஜக நிர்வாகிகள் அமித்ஷா அமைச்சரவையில் இடம்பெறுவார் என்று கூறியுள்ளனர். கட்சித் தலைவராக அவர் தனது உச்சபட்ச கடமையை ஆற்றிவிட்டார் என்றும் கூறியுள்ளனர். அமித்ஷா அமைச்சரவையில் இடம்பெறும் பட்சத்தில் பாஜக தலைவராக அவர் நீடிக்க இயலாது. அதனால் அமித்ஷா அமைச்சரவையில் இணைவது உறுதியானால் பாரதிய ஜனதா கட்சிக்கு புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஆனால் புதிய தலைவராக இதுவரையில் யார் பெயரும் முன்னிறுத்தப்படவில்லை.
அமித்ஷா பாஜக தலைவராக 2014ஆம் ஆண்டில் பொறுப்பேற்ற பிறகு பாஜகவின் வளர்ச்சி பன்மடங்கு உயர்ந்துள்ளது. நாட்டின் வடகிழக்கு, மற்றும் மேற்கு பகுதிகளில் பாஜக வெற்றிக்கொடி நாட்டத் துவங்கியுள்ளது. அதற்கு முன்பு இப்பகுதிகளில் பாஜகவுக்கு அரசியல் ரீதியாகப் பெரிய பலம் இல்லாமல் இருந்தது. ஆனால் தென்னிந்தியாவில் மட்டும் கர்நாடகாவைத் தவிர்த்து மற்ற மாநிலங்களில் பாஜகவால் அரசியல் ரீதியாக வலுவடைய இயலவில்லை. அதுமட்டுமின்றி பாஜகவின் தாய் அமைப்பாகக் கருதப்படும் ஆர்.எஸ்.எஸ்.ஸின் அறிவுறுத்தல்களை முந்தைய தலைவர்களைப் போல அமித்ஷா பின்பற்றுவதில்லை என்ற கருத்தும் பாஜக மேலிடங்களிலேயே உள்ளது. இதனால் அமித்ஷா அமைச்சரவையில் இணையும்பட்சத்தில் இவையிரண்டையும் கருத்தில்கொண்டு புதிய தலைவர் நியமிக்கப்படலாம் எனவும் சொல்லப்படுகிறது.
.
.
**
மேலும் படிக்க
**
.
.
**
[டிஜிட்டல் திண்ணை: அரசியலில் ரஜினி, கமலை இணைக்க இளையராஜா முயற்சி!](https://minnambalam.com/k/2019/05/24/93)
**
.
**
[ஓ.பன்னீரின் ‘பொதுச் செயலாளர்’ திட்டம்: அதிர்ச்சியில் எடப்பாடி](https://minnambalam.com/k/2019/05/25/30)
**
.
**
[தேர்தல் முடிவு: தினகரனுக்கு மருத்துவர்கள் பரிசோதனை!](https://minnambalam.com/k/2019/05/25/20)
**
.
**
[ராஜ்யசபா: அன்புமணியின் அடுத்த மூவ்!](https://minnambalam.com/k/2019/05/24/9)
**
.
**
[திமுக எம்.பி.க்களின் ரகசிய புலம்பல்!](https://minnambalam.com/k/2019/05/24/30)
**
.
.
�,”