மத்திய அரசு அமெரிக்காவுக்கு வரையறுக்கப்பட்ட விலையில் கச்சா சர்க்கரையை ஏற்றுமதி செய்ய அனுமதி அளித்துள்ளது.
சர்க்க்ரை ஏற்றுமதியில் ‘கட்டண விகிதம் கோட்டாக்கள்’ (TRQ) எனப்படும் ஒதுக்கீடு அடிப்படையில்தான் ஏற்றுமதிக்கான கட்டணம் விதிக்கப்படும். எனவே TRQ முறையில் சுமார் 8,424 டன் கச்சா சர்க்கரை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.
இத்தகைய ஒதுக்கீடு அடிப்படையில் ஏற்றுமதி செய்யப்படும் கச்சா சர்க்கரைக்கான சுங்க வரி குறைவு. குறிப்பிட்டுள்ள அளவு சர்க்கரை நடப்பு ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட வேண்டும் என்று அந்நிய வர்த்தக இயக்கம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவுடன் மட்டுமின்றி இதுபோன்று வரி விதிப்பின்றி குறிப்பிட்ட அளவு சர்க்கரையை ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தத்தையும் இந்தியா செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.�,