தமிழகத்தில் மூன்றாம் தலைமுறை நடிகர்கள் நடித்து வெளியாகும் படங்களின் வசூல் ரஜினிகாந்த் படங்களின் வசூலை கடந்து முன்னேறி வருகிறது.
பிரம்மாண்டமான செலவில் தயாரிக்கப்பட்ட 2 .0 படத்தின் வசூல் கூட விஜய் நடித்து வெளியான சர்கார் படத்தின் வசூலை சமன் செய்ய முடியாமல் தடுமாறியது.
ஆனால் வெளிநாடுகளில் ரஜினி நடித்த படங்கள் வசூல் ரீதியாக தொடர்ந்து முதல் இடத்தை தக்கவைத்து வருகின்றன.
வெளிநாடு வாழ் தமிழர்களால் அதிகம் ரசிக்கப்படுகிற தமிழ் நடிகராக ரஜினிகாந்த் இருப்பதே இதற்கு காரணம் என்கின்றனர் தமிழ் படங்களின் வெளிநாட்டு விநியோகஸ்தர்கள்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள படம் பேட்ட. சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, நவாஸுதீன் சித்திக், சசிகுமார் உள்ளிட்ட பலர் ரஜினியுடன் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தைதயாரித்துள்ளது.
இப்படம் அமெரிக்காவில் எந்திரன் படத்தின் வசூலை நெருங்கியுள்ளது. அதிக வசூல் செய்த முதல் 10 தமிழ்ப் படங்களின் பட்டியலில் முதல் 4 படங்கள் ரஜினிகாந்த் நடித்து வெளியான படங்கள் ஆகும்.
1.கபாலி – 4.58 மில்லியன் டாலர்கள்
2.எந்திரன் – 2.02 மில்லியன் டாலர்கள்
3.பேட்ட – 2.00 மில்லியன் டாலர்கள்
4.காலா – 1.9 மில்லியன் டாலர்கள்
5.மெர்சல் – 1.83 மில்லியன் டாலர்கள்
6. 24 – 1.63 மில்லியன் டாலர்கள்
7.லிங்கா – 1.52 மில்லியன் டாலர்கள்
8.ஐ – 1.24 மில்லியன் டாலர்கள்
9.தெறி – 1.12 மில்லியன் டாலர்கள்
10.விஸ்வரூபம் – 1.06 மில்லியன் டாலர்கள்�,