அமெரிக்கத் தேர்தல்: குறைந்த தீமையைத் தேர்ந்தெடுங்கள்!

Published On:

| By Balaji

-ரோபர்ட் பார்சோச்சினி

(அமெரிக்க குடியரசுத் தேர்தலுக்கான தேர்தலில் ஆகப்பெரும் கட்சிகளான பழமைவாத குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதிப்படும் நாள் நெருங்குகிறது. குடியரசுக் கட்சி நாமினிகளில் டொனால்ட் டிரம்ப் முன்னணியில் உள்ளார். இதுவரை 845 வாக்குகள் பெற்றுள்ளார். டாம் க்ரஸ் இரண்டாமிடத்தில் 559 வாக்குகள் பெற்றுள்ளார். டிரம்புக்கு இன்னும் 392வாக்குகள் தேவை. இன்னும் 733 வாக்குகள் உள்ளன. அதேபோல, ஜனநாயகக் கட்சியில் ஹில்லாரி கிளிண்டன் 1944 வாக்குகள் பெற்றுள்ளார். அடுத்து சாண்டர்ஸ் 1192 வாக்குகள் பெற்றுள்ளார். ஹிலாரிக்கு இன்னும் 439 வாக்குகள் தேவை. இன்னும் 1629 வாக்குகள் உள்ளன. எனவே டிரம்பும், ஹிலாரியும் மோதுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இந்நிலையில் யார் ஆட்சிக்கு வந்தால் குறைந்த தீமை என்ற விவாதம் தொடங்கிவிட்டது)

இனவாதம் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டுமா? நீங்கள் எந்தமாதிரியான முன்னுரிமை அளிக்க விரும்புகிறீர்களோ அதுமாதிரி வாழ வேண்டுமா? அப்படியானால், இரண்டு சனியன்களில் குறைந்த அபாயம் உள்ள ஹிலாரி கிளிண்டனைத் தேர்ந்தெடுங்கள்! என்று அமெரிக்க ஜனநாயகக் கட்சியினர் கூறுகிறார்கள்.

அவர்கள் முன்னுரிமை என்றுகூறுவது, கார்ப்பரேட் சாம்ராஜ்யங்களின் குண்டுகளின்கீழும், பயங்கரவாத அச்சுறுத்தலின்கீழும், ஒடுக்குமுறையின்கீழும் வாழ விரும்பவில்லை என்று மக்கள் விரும்புவதைத்தான் ஜனநாயகக் கட்சியினர் குறிப்பிடுகிறார்கள். இனவாதம் என்று கூறுவதற்கு எந்த அர்த்தமும் இல்லை. மனிதர் என்றே கருதத்தக்கவர்கள் என்று அமெரிக்க பூர்வகுடிகளையோ, தென்னமெரிக்காவிலிருந்து புலம்பெயர்பவர்களையோ அல்லது புலம்பெயர்ந்த கருப்பின, கீழைத் தேசத்தவரையோ அவர்கள் மதிப்பதில்லை.

இவ்வாறு அமெரிக்க வாக்காளர்களைப் பொறுத்தவரை, ஹிலாரி கிளிண்டன், டொனால்ட் டிரம்ப் இருவருமே தனிவகையானவர்கள். இருவரும், இருவேறு வகைகளில் தீமையைப் பிரதிபலிப்பவர்கள். ஆனால், இருவரில் டிரம்ப் மோசமான தீமை என்று நினைக்கிறார்கள்.

உண்மைதான். டொனால்ட், ஹிலாரி இருவருமே சாத்தான்கள்தான்! ஆனால், ஒற்றை இனவாதத்தையும், தன்நலவாதத்தையும் நிராகரிப்பவர்களுக்கு இனவாதி ஒரு சாத்தான். ஒவ்வொரு டாலருக்கும் எத்தனை வெளிநாட்டவரானாலும் அவரது ரத்தத்தை உறிஞ்சத் தயங்காத அமெரிக்க கார்ப்பரேட் ஏகாதிபத்தியவாதி மற்றொரு சாத்தான். ஹிலாரியின் மறைமுகத் திட்டம் இதுதான் என்பது பலருக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. டொனால்டு சுற்றுச்சூழலியலுக்கு ஆபத்து ஏற்படுத்துபவராக இருக்கலாம். ஆனால், ஹிலாரியும் அணுஆயுதத்தை பயன்படுத்தத் தயங்காதவர்தான். எந்தவகையில் உலகை அழிப்பது குறைந்த அபாயம் என்பதுதான் இப்போது அமெரிக்கர்கள் தேர்வு செய்யவுள்ளது.

அதனால், குறைந்த தீமையுள்ள சாத்தானைத் தேர்வுசெய்து லஞ்சம், ஊழல், முறைகேடுகள், வாழ்வாதாரங்கள் பறிப்பு, வறுமையில் தள்ளப்படுதல் ஆகியவற்றை அமெரிக்க மக்கள் தாங்கிக்கொள்ள வேண்டும்.

சுருக்கமாகக்கூறினால் ஹிலாரியோ, டிரம்போ அவர்களின் ஆளில்லாத விமானங்கள் உலகின்மீது பறந்து பறந்து குண்டுமழை பொழிவதை நிறுத்தப் போவதில்லை. கொலைகளையும், சித்ரவதைகளையும், வன்புணர்ச்சிகளையும் குறைக்கப் போவதில்லை. ஆனால், தொலைநோக்கில் நீண்டநெடிய மக்கள் இயக்கங்கள் தேவைப்படுகிறது. அதற்கு, யாரையும் அடிமைப்படுத்தும் சிந்தனையில் இருந்து ஒவ்வொருவரும் விடுபட வேண்டும். லஞ்சத்தையும், தன்னலக்குழுவின் கையில் ஆட்சியைத் தருவதையும், அமெரிக்க பன்னாட்டு பயங்கரவாதத்தையும், ஒடுக்குமுறையையும் வெறுக்கும் சிந்தனையை உள்வாங்க வேண்டும்.

கட்டுரையாளர்: ரோபர்ட் பார்சோச்சினி உலகமறிந்த கட்டுரையாளர்.

http://www.countercurrents.org/barsocchini250416.htm�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment