இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் நேற்றுடன் முடிந்தது. இதனையடுத்து பல்வேறு நிறுவனங்கள், ஊடகங்கள் சார்பில் தேர்தலுக்குப் பிந்தைய வாக்குக் கணிப்புகள் வெளியிடப்பட்டன. அதில் பெரும்பாலானவை பாஜக கூட்டணி 305 இடங்கள் வரை வெற்றிபெற்று மத்தியில் மீண்டும் ஆட்சியமைக்கும் என்று குறிப்பிட்டிருந்தன. காங்கிரஸ் கட்சி 150 இடங்கள் வரைதான் பெறும் என்றும் கூறியிருந்தன.
இந்நிலையில் பாஜக தலைவர் அமித் ஷா, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தலைவர்களுக்கு நாளை மே 21ஆம் தேதி இரவு விருந்து அளித்து ஆலோசனையில் ஈடுபடவுள்ளார். டெல்லியில் அசோகா நட்சத்திர விடுதியில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில், கூட்டணி தொடர்பாகவும் தேர்தல் முடிவுகளுக்கு பிந்தைய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது. இதற்காக கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திலிருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோருக்கும் அமித் ஷா அழைப்பு அனுப்பியுள்ளார். இதனை ஏற்று இருவரும் அமித் ஷாவின் டின்னரில் பங்கேற்கிறார்கள்.
சென்னையிலிருந்து இன்று காலை சேலத்திற்குச் சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வரும் 22ஆம் தேதி இரவு சென்னை திரும்ப இருந்தார். அதற்கேற்றார்போல நாளை மற்றும் நாளை மறுநாள் அதிமுக நிர்வாகிகளை சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கியிருந்தார். இன்று காலை நெடுஞ்சாலை நகரிலுள்ள இல்லத்தில் தங்கியிருந்தபோதுதான் முதல்வருக்கு டெல்லியிலிருந்து அழைப்பு வந்திருக்கிறது. இதனையடுத்து நாளை காலை சேலத்திலிருந்து காரில் கோவை செல்லும் முதல்வர், அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி செல்லவுள்ளார். துணை முதல்வர் பன்னீர்செல்வம் இன்று இரவே விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.
இதுபோலவே தேமுதிக பொருளாளர் பிரேமலதா, புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோரும் அதில் கலந்துகொள்கிறார்கள்.
.
.
**
மேலும் படிக்க
**
.
**
[சோனியா திடீர் உற்சாகம்: காரணம் என்ன?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/16)
**
.
**
[வாக்குக் கணிப்பும் மக்கள் முடிவும்: தேர்தல் வரலாறு சொல்வது என்ன?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/18)
**
.
**
[தமிழகம்: திமுக கூட்டணிக்கே சாதகம்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/20)
**
.
**
[அமமுகவின் க்ளைமாக்ஸ் வியூகம்- சமாளித்தாரா செந்தில்பாலாஜி?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/19/37)
**
.
**
[ஸ்டாலின் –மம்தாவுக்கு இடையே போட்டி!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/19/38)
**
.
.
�,”