அமமுக தோல்விக்கான காரணங்கள்: அறிக்கை அனுப்பிய நிர்வாகிகள்!

Published On:

| By Balaji

அதிமுகவை எதிர்த்து கட்சியை ஆரம்பித்த தினகரன், முதன்முறையாக மக்களவை மற்றும் 22 தொகுதிகளுக்கான இடைத் தேர்தலைச் சந்தித்தார். ஆளுங்கட்சியான அதிமுகவுக்கும், எதிர்க்கட்சியான திமுகவுக்கும் அமமுக கடும் போட்டியாக விளங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதுபோலவே ஆளுங்கட்சிக்குச் சரிசமமாகத் தேர்தல் பணியாற்றினார்கள் அமமுகவினர். பண விவகாரத்திலும் ஆளுங்கட்சிக்கு ஈடுகொடுத்தனர். இதனைப் பார்த்த தொகுதி மக்கள் அதிமுகவைப் பல இடங்களில் அமமுக பின்னுக்குத் தள்ளும் என்றும் பேசிவந்தனர்.

ஆனால், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அவை தலைகீழாக மாறியுள்ளது. போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவிய அமமுக 22.25 லட்சம் வாக்குகளைக் கைப்பற்றி மூன்றாவது இடம் பிடித்துள்ளது. இதுதொடர்பாக நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த தினகரன், “நாங்கள் மாபெரும் வெற்றியை எதிர்பார்த்தோம், அது கிடைக்கவில்லை. இதற்கான காரணம் போகப் போகப் புரியும். அமமுக வாக்குச் சாவடி முகவர்களே நான்கு பேர் இருக்கும் நிலையில், பல வாக்குச் சாவடிகளில் எங்களுக்கு ஒரு வாக்குகூடப் பதிவாகவில்லை. இதுதொடர்பாகத் தேர்தல் ஆணையம் பதில் சொல்ல வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

ஆனால், இவ்வளவு குறைந்த வாக்குகளைப் பெறுவோம் என்று எதிர்பார்க்காத தினகரன், மிகவும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார். இதுதொடர்பாக தினகரன், அவரது உதவியாளர்கள் மல்லி என்ற மல்லி கிருஷ்ணா, ஜனா, பிரவின் உட்பட ஒரு டீம் தீவிரமான ஆலோசனையில் இறங்கியுள்ளது.

தினகரன் உதவியாளர்களில் ஒருவரான பிரவின் தமிழகம் முழுவதுமுள்ள அமமுக மாவட்ட நிர்வாகிகளைத் தொடர்புகொண்டு, தேர்தல் ரிசல்ட், பூத் முகவர், பொது முகவர், டம்மி வேட்பாளர், அவரது முகவர் பட்டியல்கள், பூத் வாரியாக அமமுக பெற்றுள்ள வாக்குகளை உடனடியாக ஆன் லைனில் தலைமைக்கு அனுப்பச் சொல்லியுள்ளார். இதனையடுத்து தமிழகம் முழுவதிலுமிருந்து இரவும் பகலுமாகத் தலைமைக்கு அறிக்கை அனுப்பி வருகிறார்கள் அமமுக நிர்வாகிகள்.

அதில், வாக்குக் குறைவுக்கு மிக முக்கியமான காரணமாக, “பரிசு பெட்டி சின்னம் சுயேச்சை என்பதால் இரண்டாவது, மூன்றாவது வாக்குப் பதிவு இயந்திரத்தில் பொருத்தப்பட்டதால் வாக்காளர்களால் தேட முடியவில்லை. வயதானவர்களுக்குப் பரிசு பெட்டிச் சின்னம் அயன் பாக்ஸ் போல் தெரிந்துள்ளதால் வேறு சின்னத்திற்கு ஓட்டுப்போட்டிருக்கிறார்கள்” என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். பிரச்சாரத்தில் அதிமுக ஆட்சியைக் கவிழ்க்க திமுகவுடன் சேர்ந்து செயல்படுவோம் என்று பேசியதும் நமக்கு ஒரு பின்னடைவாக அமைந்தது. நமக்கு வாக்களிக்க இருந்த பலர் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட மக்கள் நீதி மையம் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்துள்ளனர். இதனால்தான் நமக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்ற செய்தியையும் தலைமைக்குப் பதிவு செய்துள்ளனர்.

வரும் ஜூன் 1ஆம் தேதி நடத்தப்பட உள்ள ஆலோசனையில் இன்னும் பல விவகாரங்கள் வெளிப்படலாம் என்று கூறுகிறார்கள் அமமுகவினர்.

.

.

**

மேலும் படிக்க

**

.

.

**

[ரயில்வே இணையமைச்சர் ஆகிறார் ரவீந்திரநாத்?](https://minnambalam.com/k/2019/05/26/55)

**

.

**

[அதிமுகவில் ராஜ்யசபா ரேஸ்!](https://minnambalam.com/k/2019/05/26/52)

**

.

.

**

[இடைத்தேர்தல் தோல்வி: நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை](https://minnambalam.com/k/2019/05/26/32)

**

.

**

[திருநாவுக்கரசர் மீது திமுக அதிருப்தி!](https://minnambalam.com/k/2019/05/26/41)

**

.

.

**

[வாக்குகளை வழிப்பறி செய்துள்ளது திமுக அணி: ராமதாஸ்](https://minnambalam.com/k/2019/05/26/35)

**

.

.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share