அரவக்குறிச்சி தொகுதியில் இடைத்தேர்தல் பரப்புரை முடிந்த மே 17ஆம் தேதி மாலை அனைத்து கட்சிகளின் வெளியூர் பொறுப்பாளர்களும் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு புறப்பட்டனர்.
இந்நிலையில் தொகுதியிலேயே இருந்த அமமுகவின் லோக்கல் பொறுப்பாளர்கள் திடீரென ஒரு வேலையில் இறங்கினர்.
அக்கட்சியின் சார்பில் அரவக்குறிச்சியில் போட்டியிடும் சாகுல்ஹமீது இஸ்லாமியர் என்பதால் ஆங்காங்கே பள்ளிவாசல்களில் இஸ்லாமிய மக்களை ரமலான் நோன்பு திறப்புக்குப் பின் தனிப்பட்ட முறையில் சந்தித்து உட்கார்ந்து பேசினர்.
“நம்ம பாய் நிற்கிறாரு. அவருக்கு ஓட்டு போடுங்க இது பார்லிமென்ட் எலக்ஷன் இல்ல. சட்டமன்றத் தேர்தல். சட்டமன்றத்தில் நம்ம ஆளுங்க இருக்கணும். அதனால கட்சி பேதம் பார்க்காம நீங்க பார்த்து முடிவு பண்ணுங்க’ என்று சாகுல் ஹமீதுக்காக அமைதியான அதே நேரம் வீரியமான வேலையில் இறங்கினர் அமமுக பிரமுகர்கள்.
இந்த தகவல் திமுக வேட்பாளரான செந்தில் பாலாஜிக்கும் அதிமுக வேட்பாளர் செந்தில் நாதனுக்கும் தெரியவர அவர்கள் பதறிப் போனார்கள். அரவக்குறிச்சி இடைத்தேர்தலுக்கு, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வலதுகரமான ஆத்தூர் இளங்கோவன்தான் அதிமுகவின் பொறுப்பாளர்.
அவரது கவனத்திற்கு விஷயம் சென்றதும் உடனடியாக லோக்கல் பொறுப்பாளர்களை தொடர்பு கொண்டு, அமமுகவின் இந்த வேலையை முறிடிக்க கூடுதலாக ஒரு தொகையைப் பட்டுவாடா செய்யலாமா என்று ஆலோசித்தார். ஆனால், அதற்கு லோக்கல் நிர்வாகிகள், ‘அது இப்ப ரிஸ்க்கான வேலை, முடியாது’ என்று மறுத்து விட்டனர்.
அதேநேரம் செந்தில் பாலாஜி எப்போதும் தனக்கென வைத்திருக்கும் உள்ளூர் இளைஞர்கள் குழு மூலம் திடீரென கடைசி கட்டத்தில் ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் கூடுதலாக வினியோகித்து முடித்துவிட்டார்.
ஏற்கனவே திமுக, அதிமுக,அமமுக ஆகிய கட்சிகளின் பொறுப்பாளர்கள் தங்களுக்குள் பேசி முடிவு செய்து தலா 2,000 ரூபாய் வாக்காளர்களுக்கு விநியோகித்தனர்.
இந்த நிலையில் சாகுல்ஹமீதுவுக்காக நடைபெற்ற பள்ளிவாசல் வியூகத்தை முறியடிப்பதற்காக செந்தில் பாலாஜி கூடுதலாக 1000 ரூபாயை இறக்கியுள்ளார். அமமுகவின் க்ளைமேக்ஸ் வியூகத்தை செந்தில்பாலாஜியின் கரன்சி வியூகம் சமாளிக்குமா என்று தெரியவில்லை என்று திமுகவினரே கூறுகின்றனர்.
.
.
**
மேலும் படிக்க
**
.
**
[ஸ்பெயின் ரசிகர்களைக் கவர்ந்த தனுஷ்](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/53)
**
.
**
[டிஜிட்டல் திண்ணை: கமலின் நாக்கு- அமைச்சரை பாராட்டிய முதல்வர்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/18/88)
**
.
**
[விமர்சனம்: மான்ஸ்டர்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/19/14)
**
.
**
[பாஜக ஆட்சிக்கான ஆதரவு வாபஸ்: நாகா மக்கள் முன்னணி!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/19/8)
**
.
**
[மோடி காய்ச்சல்: சந்திரபாபு நாயுடு பரபரப்பு!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/18/52)
**
.
�,”