�
ஜேம்ஸ் பாண்ட் பட ஹீரோ டேனியல் கிரேக் மற்றும் மம்மி தொடர் படங்களின் மூலம் பிரபலமான ரேச்சல் வெய்ஸ் தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
பிரபலத் துப்பறியும் கதாபாத்திரமான ஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் நடித்து உலகெங்கும் ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் டேனியல் கிரேக்.
கிரேக், 1992ஆம் ஆண்டு ஃபியானோ லாடன் என்ற நடிகையைக் காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. 1994ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர்.
இதையடுத்து சில நடிகைகளுடன் கிசு கிசுக்கப்பட்ட கிரேக், ‘ட்ரீம் ஹவுஸ்’ என்ற படத்தில் நடித்த போது அதில் ஹீரோயினாக நடித்த ரச்சல் வியாஸை காதலித்தார். வியாஸ், தான் காதலித்து வந்த இயக்குநர் டேரன் அரோனோஃப்ஸ்கியை பிரிந்து 2010ஆம் ஆண்டு கிரேக்கை திருமணம் செய்துகொண்டார். வியஸுக்கு அப்போது ஐந்து வயதில் ஒரு மகன் இருந்தான்.
இதைத்தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதம் இந்த தம்பதியினர் தங்களுக்கு முதல் குழந்தை பிறக்கப் போவதாக அறிவித்தனர். இந்நிலையில், கிரேக் – வெய்ஸுக்கு பெண் குழந்தை நேற்று பிறந்துள்ளது. கிரேக்குக்கு 26 வயது மகளும், ரேச்சலுக்கு 12 வயது மகனும் இருக்கின்றனர்.
�,”