டெய்லி இணையத்தில் நடக்கும் ட்ரெண்டிங் மேட்டர்லாம் எழுதலாம்னு ஐடியா வந்த போதே முதல் போணியா மாட்டினவர் அமைச்சர் ரமணாதான். நம்ம நெட்டிசன்களுக்குச் சொல்லவா வேணும்! ரோஜாப்பூ மாலை”யை வச்சு உலக ஓட்டு ஓட்டினாங்க. இருந்தாலும், ‘அவரு பொண்டாட்டிகூட அவரு போட்டோ’ எடுத்ததெல்லாம் ஒரு குற்றம்னு கட்சியைவிட்டு நீக்கினதை நினைத்து கருணை அடிப்படையில அவர் மேட்டரை விட்டுட்டு ட்விட்டருக்குப் வோம்.
ட்விட்டர்
ஹரியானாவில் ஜாட் சாதியினர் தங்களை பொதுப் பட்டியலில் இருந்து இதர பிற்படுத்தப்பட்டவர்கள் (OBC) பட்டியலில் சேர்க்க கடுமையாகப் போராடி வருகின்றனர். நேற்று, போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனால், ஹரியானாவின் அனைத்துப் பாதைகளையும் மூடியுள்ள ஜாட் சாதியினர், டெல்லிக்குச் செல்லும் குடிநீர்க் குழாய்களையும் அடைத்துள்ளனர். நாடு முழுவதும் 800 ரயில்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ட்விட்டரில் இன்று காலை, ’ஜாட்-விரோதி-மோடி’ என்று, இந்தி மொழியில் டேக் போடப்பட்டு வறுத்து எடுத்தனர் ஜாட் ஆதரவாளர்கள். இதற்கு எதிர்வினையாக, பிஜேபி இணைய ஆதரவாளர்கள் ’ஆர்.எஸ்.எஸ் தலைவரே, ஜாட் சமுதாயத்தைச் சேர்ந்தவர்தான்’ என ட்விட் போட, ஏற்கனவே கொந்தளித்துக் கிடந்த ஜாட் ஆதரவாளர்கள், ’எங்களிடம் வாக்குறுதி அளித்து ஓட்டுக் கேட்டது பிஜேபி-தான்; ஆர்.எஸ்.எஸ். அல்ல’ என, கண் சிவந்தனர். இந்திய அளவில் ட்விட்டரில், ட்ரெண்டிங் லிஸ்ட் டாப்-பில் வந்த இந்த மேட்டரில், எல்லாத்துக்கும் கருத்து தெரிவிக்கும் நம் தமிழர்கள் அதிகம் கவனம் செலுத்தவில்லை. இரண்டே இரண்டு பேர் மட்டும்,
Mohan @itzMohans Feb 20
இடைநிலை ஜாதிகளை திட்டமிட்டு தூண்டிவிடுகிறார்கள் போல் தெரிகிறது.. அன்று குஜராத் பட்டேல் இன்று ஹரியானா ஜாட்..#JatReservation
Rajesh Pillai @rajeshpillai1 Nashik, India
ஜாட் போராட்டம் : ரயில் டிக்கெட் கவுன்டருக்கு தீவைப்பு..
@நம்ம ஊருகாரன் எவனே அங்க இருக்கான் போல ….
என ட்விட் போட்டிருந்தனர்.
வாட்ஸ் அப்
ஒரு பத்து இளைஞர்கள். அவர்களுடன் ஒரே ஒரு பெண், புகைத்துக்கொண்டும், தள்ளாடிக்கொண்டும். அந்தக் குழுவினர் ஊட்டி, மூணாறு போன்ற மலைப் பகுதிகளில் செல்ஃபி எடுத்துக்கொள்ளும் படம் முதலில் வெளியாகியது. சிறிது நேரத்தில், ஒரு வீடியோவும் வெளியானது. நோ நோ… நீங்க நினைக்கிற மாதிரி வீடியோ அல்ல; அந்த செல்ஃபிக்கள் எடுக்கப்பட்டபோது எடுத்த வீடியோதான் அது. எல்லோரும் மலையாளம் பேசுகிறார்கள். வழக்கம்போல நம் ஆன்லைன்வாசிகள், அந்த மாணவர்களுடன் படத்தில் இருப்பது அவர்களின் பேராசிரியை என்றும், இல்லையில்லை டூர் வந்த இடத்தில் கொஞ்சம் நவீனப் பெண் ஒருவருடன் பசங்கள் எடுத்துக்கொண்ட படங்களே என ’ரொம்ப முக்கியமான’ விவாதம் நடந்தது.
கொஞ்சநேரம் கழித்து 50களைத் தொட இருக்கும் அங்கிள் ஒருவரிடமிருந்து வாட்ஸ் அப் செய்தி-“நீங்கள் தமிழராக இருந்தால் பகிரவும்” என தலைப்பில். சரி, என்னதான் மேட்டர்? என உள்ளே போய்ப் பார்த்தால் இதே மல்லு டீச்சர்-மாணவர்கள் போட்டோவைப் போட்டு, புதுக்கோட்டை தனியார் கல்லூரி மாணவர்களுடன் ஆசிரியை கொண்டாட்டம். நம்ம நாடு எங்க சார் போகுது? நீங்க தமிழனாய் இருந்தால் இதைப் பகிரவும், என முடித்திருந்தார்.
“யோவ் அது கேரளா குரூப், புதுக்கோட்டை அல்ல, என்கிட்ட வீடியோவே இருக்குய்யா என் சிப்ஸு” என ரிப்ளை அனுப்பினேன்.
கொஞ்சநேர அமைதிக்குப் பிறகு,
“மாப்ஸ், அந்த வீடியோ கொஞ்சம் அனுப்ப முடியுமா” என அந்த உணர்ச்சிவயப்பட்ட தமிழரிடம் இருந்து மெசேஜ் .
(நாளைக்கு லாகின் ஆவோம் பாஸ் )�,”