அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி – 7

Published On:

| By Balaji

பொருட்களின் உற்பத்தியை இரண்டு வழிகளில் பெருக்க முடியும்: இடுபொருட்களின் (inputs) பயன்பாட்டை அதிகரித்து உற்பத்தியைப் பெருக்கலாம், அல்லது, இருக்கும் இடுபொருட்களைத் திறம்படப் பயன்படுத்தி உற்பத்தியைப் பெருக்கலாம். நூறு பந்துகள் விளையாடி நூறு ரன்கள் எடுக்கலாம்; எழுபது பந்துகளிலும் அந்த சதத்தை அடிக்கலாம் இல்லையா? அதுபோலவே, வளங்கள் குறைவாக இருக்கும் ஒரு பொருளாதாரம், இருக்கும் வளங்களைத் திறம்படப் பயன்படுத்தி உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று பொருளியலில் ஒரு கோட்பாடு உண்டு.

1951-65 காலத்தில் இந்தியப் பொருளாதாரம் ஆண்டுக்கு 3.5 விழுக்காட்டு வேகத்தில் வளர்ந்தது. ஆனால் இந்த வளர்ச்சி செயல்திறன் (efficiency) மற்றும் உற்பத்தித்திறன் (productivity) அதிகரித்ததன் காரணமாக ஏற்படவில்லை; அதிகமான இடுபொருட்களின் பயன்பாட்டால் ஏற்பட்ட வளர்ச்சி எனும் குற்றச்சாட்டை சில பொருளாதார அறிஞர்கள் முன்வைத்துள்ளனர். முதலில் வேகமாக வளரலாம், செயல்திறன் மற்றும் உற்பத்தித்திறன் பெருக்குவதில் பின்னர் கவனம் செலுத்தலாம் எனும் வியூகம் நீண்டகாலத்திற்கு தாக்குப்பிடிக்க முடியாது என்பதே அவர்களின் வாதம்.

இந்த வாதத்தில் உண்மை இல்லை என்று நாம் சொல்லவே முடியாது. அதே நேரத்தில், முதலில் வேகமாக வளரலாம், அந்த வளர்ச்சியின் பயன்களை நியாயமாகப் பகிர்ந்தளிப்பதைப் பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என்று எண்ணினால், அதுவும் கோளாறான பார்வைதான். 1960களின் பிற்பாதியில் தொடங்கிய பசுமைப்புரட்சி, வேளாண் துறையில் செயல்திறன், உற்பத்தித்திறன் இரண்டையும் பெருக்கியதோடு, இவற்றின் வழியே வேளாண் உற்பத்தியையும் அதிகரித்தது. ஆனால், வேகமான வேளாண்துறை வளர்ச்சியின் பயன்கள் பரவலாகப் பகிரப்பட்டதா எனும் கேள்விக்கு ‘ஆம்’ என்று ஆணித்தரமாக நாம் பதிலளித்துவிட முடியாது. பசுமைப்புரட்சி ஊரகப் பகுதிகளில் ஏற்றத்தாழ்வுகளை அதிகரித்தது என்றும் சிலர் சொல்கின்றனர்.

கடந்த இருபதாண்டுகளாக வேகமாக வளர்ந்த இந்தியப் பொருளாதாரம், அதன் பலன்களை நியாயமாகப் பகிர்ந்தளிக்கவில்லை என்பதற்கு போதிய ஆதாரங்கள் உள்ளன. ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்தால், பொருளாதார வளர்ச்சியின் வேகமும் விரைவில் குறையத் தொடங்கிவிடும் என்று பன்னாட்டு நிதியத்தின் (IMF) ஆய்வுகள்கூட ஊர்ஜிதப்படுத்துகின்றன.

பொருட்களுக்கான சந்தை வளர்ந்தால் மட்டுமே வளர்ச்சியின் வேகம் சீராக இருக்கும். மக்களின் வருமானம் உயர்ந்தால் மட்டுமே சந்தை விரிவாக்கம் ஏற்படும். மேட்டுக்குடி மக்களுக்கு தேவையான பொருட்களை உற்பத்தி செய்து மட்டுமே பொருளாதாரத்தில் கிராக்கியின் அளவைத் தொடர்ந்து உயர்த்த முடியாது. ஆக, வேகமான வளர்ச்சி, செயல்திறன்-உற்பத்தித்திறன் பெருக்கம், நியாயமான வருமானப் பகிர்வு எனும் மூன்றும் ஒன்றோடு ஒன்று இணைந்ததே என்பதை உணர்ந்து பொருளாதாரம் இயங்க வேண்டும். பொருளாதாரத்தில் சந்தையின் பங்கை அதிகரிக்க விரும்புபவர்களும் இந்த உண்மையை அங்கீகரிக்க வேண்டும்.

[அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி-1](https://minnambalam.com/k/2019/05/17/17)

[அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி – 2](https://minnambalam.com/k/2019/05/18/48)

[அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி – 3](https://minnambalam.com/k/2019/05/19/19)

[அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி – 4](https://minnambalam.com/k/2019/05/20/37)

[அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி- 5](https://minnambalam.com/k/2019/05/21/18)

[அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி- 6](https://minnambalam.com/k/2019/05/22/21)

.

.

**

மேலும் படிக்க

**

.

.

**

[ரயில்வே இணையமைச்சர் ஆகிறார் ரவீந்திரநாத்?](https://minnambalam.com/k/2019/05/26/55)

**

.

**

[அதிமுகவில் ராஜ்யசபா ரேஸ்!](https://minnambalam.com/k/2019/05/26/52)

**

.

.

**

[இடைத்தேர்தல் தோல்வி: நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை](https://minnambalam.com/k/2019/05/26/32)

**

.

**

[திருநாவுக்கரசர் மீது திமுக அதிருப்தி!](https://minnambalam.com/k/2019/05/26/41)

**

.

.

**

[வாக்குகளை வழிப்பறி செய்துள்ளது திமுக அணி: ராமதாஸ்](https://minnambalam.com/k/2019/05/26/35)

**

.

.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share