நடிகை அனுஷ்கா ஷர்மாவுக்கு, சிங்கப்பூரில் உள்ள மேடம் டூசாட்ஸ் அருங்காட்சியகத்தில் மெழுகுச் சிலை நிறுவப்பட்டுள்ளது.
உலகின் புகழ்பெற்ற மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகம் பல நாடுகளில் தனது கிளைகளை நிறுவியுள்ளது. லண்டன், டில்லி, சிங்கப்பூர் இடங்களில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் பல பிரபலங்களின் மெழுகுச் சிலை வைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், நடிகை சன்னி லியோனுக்கு மெழுகுச் சிலை வைக்கப்பட்ட நிலையில், தற்போது பாலிவுட்டின் முன்னணி நாயகிகளில் ஒருவரான அனுஷ்கா ஷர்மாவுக்கு சிங்கப்பூரில் மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது.
இந்த சிலை நேற்று (நவம்பர் 19) திறக்கப்பட்ட நிலையில், விழாவில் கலந்துகொண்ட அனுஷ்கா ஷர்மா, சிலை அருகில் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார். எது சிலை எது அசல் என்று தெரியாத வண்ணம் அந்த சிலை அற்புதமாகச் செதுக்கப்பட்டுள்ளது. இந்த மெழுகுச் சிலையின் கையில் ஒரு விலையுயர்ந்த கைபேசியும் இயங்கும் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அந்தக் கைபேசி மூலமாகவே செல்ஃபி எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யும் புதிய வசதியுடன் இந்த சிலை அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூரில் இதற்கு முன்னர், அமிதாப் பச்சன், ஷா ரூக் கான், கஜோல் போன்றோருக்குச் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. டில்லியில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் அனுஷ்கா ஷர்மாவின் கணவரும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனுமான விராட் கோலிக்குச் சிலை வைக்கப்பட்டுள்ளது.
ஷாருக்கானின் ‘ரப் நே பனா தி ஜோடி’ படத்தின் மூலம் பாலிவுட்டில் கதாநாயகியாக அறிமுகமானவர் அனுஷ்கா ஷர்மா. இதனையடுத்து ‘பேன்ட் பாஜா பாரத், ஜப் தக் ஹை ஜான், PK, NH10, தில் தடக்னே தோ, சுல்தான், ஏ தில் ஹை முஷ்கில், சஞ்சு’ என பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். தற்போது, அனுஷ்கா ஷர்மா கைவசம் ஷாருக்கானின் ‘ஜீரோ’ படம் உள்ளது.
�,”