^அந்நியச் செலாவணி கையிருப்பு சரிவு!

public

கடந்த ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்குச் சென்ற வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு மிகப் பெரிய சரிவைச் சந்தித்துள்ளது.

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு அளவு குறித்த விவரங்களை மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது அதன்படி, அக்டோபர் 12ஆம் தேதி நிறைவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 5.1 பில்லியன் டாலர் குறைந்துள்ளது. அதாவது அக்டோபர் 5ஆம் தேதி நிறைவடைந்த வாரத்தில் 399.6 பில்லியன் டாலராக இருந்த அந்நியச் செலாவணி கையிருப்பு, அக்டோபர் 12ஆம் தேதியில் 394.46 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது. இச்சரிவானது கடந்த ஏழு ஆண்டுகளில் இந்தியா சந்திக்கும் மிகப் பெரிய சரிவாகும். வெளிநாட்டு நாணய சொத்துகளின் சரிவு காரணமாகவே அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள மாதாந்தர அறிக்கையின் படி, மார்ச் மாத இறுதியிலிருந்து ஆகஸ்ட் மாதம் வரையில் மொத்தம் 1.28 லட்சம் கோடி டாலர் மதிப்பிலான அமெரிக்க டாலரை ரிசர்வ் வங்கி விற்பனை செய்துள்ளது. இதனால் இந்த ஆண்டின் மார்ச் மாதம் முதல் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பில் 30 பில்லியன் டாலர் குறைந்துள்ளதோடு, அந்நிய நாணய சொத்து மதிப்பும் 29.4 பில்லியன் டாலர் சரிந்துள்ளது. இவ்வாறு அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்து வருவதற்கு வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவின் கடன் சந்தைகளில் உள்ள தங்களது முதலீடுகளைத் திரும்பப் பெற்று வருவதே காரணம் என்று சந்தை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *