அந்தத் தூதுவனை ஓரமா போகச்சொல்லுங்க: அப்டேட் குமாரு

Published On:

| By Balaji

காலேஜ் படிக்கிறச்ச, சாதாரண நாளெல்லாம் மட்டம் போட்டுட்டு, எக்சாம் நெருங்க நெருங்க தான் அட்டண்டன்ஸ் மேல கவலைப்படுவோம். அந்தமாதிரி, புயல் அடிச்சு ஓஞ்ச பகுதிகளை பார்வையிடுறோம்னு ஒவ்வொரு அரசியல்வாதியா கிளம்பிப்போய் அங்க வேலை நடக்கவிடாம செய்துக்கிட்டு இருக்காங்க. சரி, அரசு அதிகாரிகள் என்ன பண்றாங்கன்னு பாத்தா, தினம் ஒரு அமைச்சர் இல்லைன்னா எம்.எல்.ஏ ஏதாவது ஒரு பகுதிக்கு வர்றதால, அவங்களுக்கான ஏற்பாட்டைப் பாக்கவே நேரம் சரியா போகுதுன்னு புலம்புறாங்க. அரசு அதிகாரிக வந்து கணக்கெடுப்பாங்கன்னு செத்துக்கிடக்கும் தென்னம்பிள்ளையையும், பிரிஞ்சு கிடக்கும் கூரையையும் அப்டியே விட்டுட்டு உக்காந்திருந்தா மழை தான் தினம் வந்து நலம் விசாரிச்சிட்டு போகுதாம். அங்க என்னடான்னா ஆளுங்க வரலையேன்னு கவலைல இருக்காங்க, ஆனா இந்த ரணகலத்துலயும் டி.டி.வி தினகரன் ஆளுங்க தூதன் வருவான், மாரி பொழியும், சோழம் மீளும்னு மீம்ஸ் போட்டுக்கிட்டு இருக்காங்க. ஏன் பாஸு அந்த தூதன் கால் டாக்ஸி புக் பண்ணி சீக்கிரம் வரமாட்டாரா? நியூஸ் பேப்பர் விளம்பரமெல்லாம் குடுத்துட்டு தான் வருவாராமா?

**@கருப்பு கருணா**

புயலடித்த கிராமங்களுக்கு போய் ஒரு கைப்பிடி அரிசி கொடுத்தாலும் அது நூறு தீபங்களை ஏற்றுவதற்கும் மேலானது!

**@Thaadikkaran**

மத்திய அரசிடம் இருந்து முதற்கட்ட நிதி வரவில்லை – திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வேதனை

# சிலை வைக்குறோம்னு சொன்னா வந்திருக்குமோ என்னவோ..!?

**@yugarajesh2**

‘நான் ஒரு தடவை சொன்னால் நூறு தடவை சொன்ன மாதிரி’-பாட்ஷா ரஜினி

‘நான் ஒரு தொகுதியில் நாலு தடவை வெற்றி பெற்றால் ஒன்பது தடவை வென்ற மாதிரி’-எடப்பாடி பழனிசாமி

**@parveenyunus**

கஜா புயல் நிவாரண பணிகளுக்காக அரசுடன் இணைந்து பணியாற்ற தயார்-கமல் #

இவரும் ஹெலிகாப்டர்ல இடம் கேக்கறாரோ..?

**@Thaadikkaran**

பத்து ஆண்டுகள் பிரதமராக இருந்த தம்மை யாரும் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கவில்லை – மன்மோகன்சிங்

# நீங்கதான் ‘மியூட்’ ல இருந்தீங்களே சார்..!

**@yugarajesh2**

ஹெலிகாப்டரில் தாழ பறந்தபடியே எத்தனை மரங்கள் சாய்ந்துள்ளன என்று கணக்கெடுத்ததற்கு பதிலாக வீட்டில் இருந்த படியே பைனாக்குழல் வழியாக ஆய்வு செய்திருந்தால் இன்னும் தெளிவாக கணக்கெடுத்திருக்கலாம் விவசாயி மகனே.

**@parveenyunus**

கல்யாணத்துல ஓடியாடி பரிமாறி டயர்ட் ஆனவன் கண்டு பிடிச்சது தான் ‘பஃபே’ சிஸ்டம் விருந்தா இருக்கும்.

**@Fazil_Amf**

மத்திய குழு ஆய்வு செய்து அறிக்கை வழங்கிய பிறகு, நிவாரண உதவி வழங்குவதுதான் நிர்வாக ரீதியான நடைமுறை – தமிழிசை

• நடைமுறையை பாலோவ் பண்ணனும்டு முதல்ல பொன்னாருக்கு சொல்லி கொடுங்க..!

**@Kozhiyaar**

ஆனா கேரளாவில அவமானப்பட்டதுக்கு தமிழகத்தில போராடும் ஓரே கோஷ்டி நம்ம கோஷ்டி தான்!!!

**@pachaiperumal23**

முதல்வர் ஹெலிகப்டரில் சென்றதால் தான் பிரதமரிடம் சேத விவரங்களை விரைவாக தர முடிந்தது – ஸ்டாலினுக்கு ஜெயக்குமார் பதில்.

ஏண்ணே ராக்கெட்ல போயிருக்கலாம்ல இன்னும் விரைவாக தரலாம்ல.

**@rahimgazali**

மழைக்காலங்களில் வெள்ளை வேட்டி கட்டுவதென்பது சொந்தக்காசில் சூனியம் வைப்பதுபோலதான்.

**@Thaadikkaran**

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு 2017ம் ஆண்டுக்கான இந்திரா காந்தி அமைதிக்கான விருது

# அமைதிக்கே விருதா, அடடே !!

**@வெ. பூபதி**

இயல்பை விட்டுக்கொடுக்காதவர்களின் செயல்கள் ஈர்ப்பது இயல்பு!

**@mohanramko**

‘முழுக்க நனைந்த பிறகு முக்காடு எதற்கு’ என்ற எண்ணத்திலேயே டீல் செய்கிறார்கள் ஆட்சியாளர்கள்

**@Akku_Twitz**

எடப்பாடி தொகுதியில் 4 முறை மட்டுமே வெற்றி பெற்ற முதல்வர், 9 முறை வெற்றி பெற்றதாக பேட்டி..!!

ஒன்பதுல இருந்து அஞ்சு கழிச்சிகோங்க நாலு வரும் – செல்லூர் ராஜூ

**@parveenyunus**

கஜா புயலுக்கு முன் பணக்காரர்களாக இருந்தவர்கள் தற்போது ஏழையாகிவிட்டனர் – அமைச்சர் உதயகுமார் #

ஆனா..கஜா புயலுக்கு முன் கார்ல போனவங்க இப்ப ஹெலிகாப்டர்ல போனாங்களே..?

@HAJAMYDEENNKS**

ஒரு வாரம் கழித்து வந்த கரண்ட் திருவிழா போல தோற்றத்தை கொடுக்கிறது !

மின்வாரிய ஊழியர்களுக்கு நன்றி !

**@motheen_farook**

வெள்ளையுஞ் சொல்லையுமா அரசியல் கட்சிகள் நிவாரணத்தில் இறங்கினாலும் கலர் சட்டையில் களத்தில் நிற்கும் பசங்களோட வெள்ளை மனசுதான் அதைவிட பளிச்சுனு தெரியுது !!

**@parveenyunus**

முழுமையான சேத விவரங்களை தெரிந்து கொள்வதற்காகவே ஹெலிகாப்டரில் சென்றேன் – முதலமைச்சர் #

அப்படியா..? காதுல ஹெட்போன் மாட்டியிருந்ததால, பாட்டு கேக்க தான் போனீங்கன்னு நாங்க நெனச்சிட்டோம்..!

-லாக் ஆஃப்

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share