அத்திவரதரை தரிசிக்கக் கூடுதல் நேரம் வேண்டும்: விஜயகாந்த்

Published On:

| By Balaji

காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிப்பதற்குப் பொதுமக்களுக்கு வழங்கப்படும் நேரத்தை அதிகரிக்க வேண்டுமென்று விஜய்காந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அத்திவரதர் திருவிழா நடைபெற்று வருகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் ஒரே நாளில் திரண்டதால் கடும் நெரிசல் ஏற்பட்டது. இதனால் அத்திவரதரை தரிசிக்க முடியாமல் ஏராளமான பக்தர்கள் திரும்பினர். இந்த நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று (ஜூலை 14) வெளியிட்ட அறிக்கையில், “காஞ்சிபுரம் மாவட்டத்தில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதரை பூஜை செய்து 48 நாட்கள் மக்கள் தரிசிப்பதற்காகப் பார்வைக்கு வைப்பது மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், அத்திரவரதரை தரிசிக்க பல்வேறு ஊர்களிலிருந்து வரும் பொதுமக்களுக்கு தரிசிக்கும் நேரத்தை அதிகரித்து, காண வரும் பக்தர்களுக்கு அனைத்து அத்தியாவசிய உதவிகளையும், பாதுகாப்பையும் தமிழக அரசு வழங்க வேண்டும். 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் நிகழ்வு என்பதால் லட்சக்கணக்கான மக்கள் காஞ்சிபுரம் நோக்கி வருகின்றனர். எனவே தரிசிக்க வரும் பொதுமக்களுக்கு எல்லா விதத்திலும் தமிழக அரசாங்கம் உதவி செய்ய வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

**

மேலும் படிக்க

**

**[ வேலுமணியா இப்படி? – எடப்பாடி ஆதங்கம்!](https://minnambalam.com/k/2019/07/14/27)**

**[திமுகவில் இணைந்த தேமுதிக மா.செ!](https://minnambalam.com/k/2019/07/14/48)**

**[அவசரப்பட்டுவிட்டேனோ? புலம்பிய தங்கம்](https://minnambalam.com/k/2019/07/13/18)**

**[எம்.எல்.ஏ புகார்: அமைச்சரை எச்சரித்த எடப்பாடி](https://minnambalam.com/k/2019/07/14/46)**

**[டிஜிட்டல் திண்ணை: திமுக எம்.எல். ஏ.க்களுக்கு லைஃப் செட்டில்மென்ட்- கூல் எடப்பாடி](https://minnambalam.com/k/2019/07/13/72)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share