}அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுடன் பிரபாஸின் ‘சாஹோ’.

Published On:

| By Balaji

பாகுபலி திரைப்படங்களைத் தொடர்ந்து, நடிகர் பிரபாஸ் நடித்து வெளிவர இருக்கும் சாஹோ திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

தெலுங்கு திரைப்பட நடிகர் பிரபாஸ், பாகுபலி’ திரைப்படங்களில் நடித்தவர். அந்த திரைப்படங்களில் வீரம் பொருந்திய தனது அட்டகாசமான நடிப்பின் மூலமாகத் தமிழ்நாட்டிலும் ரசிக பட்டாளத்தைப் பெற்றார். தற்போது சாஹோ என்ற படத்தில் அவர் ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாகப் பிரபல பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் நடித்து வருகிறார். சுஜீத் இயக்கும் இந்த படத்தில் அருண் விஜய் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் நீல் நிதின் முகேஷ், மகேஷ் மஞ்சுரேகர் ஜாக்கி ஷெராஃப், சங்கே பாண்டே, மந்திரா பேடி, வெண்ணிலா கிஷோர் எனப்பலர் நடித்துள்ளனர். இந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் உருவாகிவரும் இந்தத் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது

பீரங்கியில் தொடங்கி, பைக் ரேஸ், கார் சேஸிங், ஹெலிகாப்டர், இயந்திரத் துப்பாக்கிகள் என டீசரில் இடம்பெறும் ஒவ்வொரு காட்சியிலும் அதிரடியும் பரபரப்பும் மிளிர்கிறது. ஹாலிவுட் தரத்திலான பின்னணி இசையும், காட்சிகளும் படத்தை அதிகமாக கவனிக்க வைக்கிறது. டீசரின் இறுதி காட்சிகளில் சிலரை பார்த்து யாரு இவங்களாம் என பிரபாஸிடம் ஷ்ரத்தா கேட்பார். அதற்கு பிரபாஸ் என்னுடைய ஃபேன்ஸ் என்பார். பின்னர் அதிரடியான துப்பாக்கி சுடும் சத்தம் கேட்கும். அதற்கு, ஷ்ரத்தா இவ்ளோ வயலன்ட்டா இருக்காங்க என்பார் அதற்கு என்னோட டைஹார்ட் ஃபேன்ஸ் என்று பிரபாஸ் கூறுகிறார்.

சாஹோ திரைப்படத்தின் போஸ்டர்கள், ஷேட்ஸ் ஆஃப் சாஹோ வீடியோக்களை தொடர்ந்து தற்போது ரசிகர்களின் மிகுந்த எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் சாஹோ திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. பாகுபலி திரைப்படங்கள் மூலம் சரித்திர நாயகனாக மக்கள் கண்டு ரசித்த பிரபாஸின் ஸ்டைலிஷான தோற்ற மாற்றமும், அதிரடியான நடிப்பும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. பிரபாஸின் டைஹார்ட் பேன்ஸ் எல்லாம் ஆகஸ்ட் 15 ஆம் தேதியை எதிர்நோக்கி ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

**

மேலும் படிக்க

**

**[அதிமுக: அந்த 11 பேர் குழுவில் யார் யார்?](https://minnambalam.com/k/2019/06/13/22)**

**[ரோஜாவுக்கு முக்கிய அரசு பதவி!](https://minnambalam.com/k/2019/06/13/11)**

**[டிஜிட்டல் திண்ணை: விரைவில் பொதுச் செயலாளர் தேர்தல்- ஓ.பன்னீர் சூசகம்](https://minnambalam.com/k/2019/06/12/74)**

**[பாக்கியராஜ் அணிக்கு விஜயகாந்த் ஆதரவு!](https://minnambalam.com/k/2019/06/13/44)**

**[அதிமுகவின் கொங்கு கோட்டை உடைந்தது: ஸ்டாலின்](https://minnambalam.com/k/2019/06/13/17)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share