தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான வேட்புமனுத் தாக்கல் ஏப்ரல் 21-ம் தேதி தொடங்கியது. இந்நிலையில் ஒவ்வொரு கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்களும் தங்கள் வேட்புமனுவைத் தாக்கல் செய்து வருகின்றனர். அதிமுக-வின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா, ஏப்ரல் 25-ம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்தார். இந்நிலையில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் 233 வேட்பாளர்களும் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ளனர். அனைவரும் ஒரேநேரத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும் என்று கட்சித் தலைமை அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வேட்பாளர்கள் அனைவரும் பகல் 12 மணிக்கு வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்கள்.�,
அதிமுக வேட்பாளர்கள் இன்று வேட்புமனுத் தாக்கல்
Published On:
| By Balaji

இதையும் படிங்க!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel