அதிமுக, திமுகவை டெபாசிட் இழக்கச் செய்யுங்கள்: தினகரன்

Published On:

| By Balaji

அதிமுகவையும் திமுகவையும் டெபாசிட் இழக்கச் செய்யுங்கள் என்று திருப்பரங்குன்றம் பிரச்சாரத்தில் தினகரன் பேசியுள்ளார்.

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், சூலூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெறவுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் முடிவடையவுள்ளது. திருப்பரங்குன்றம் அமமுக வேட்பாளர் மகேந்திரனுக்கு ஆதரவாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் தினகரன் நேற்று (மே 16) தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

வடிவேல்கரை பகுதியில் திறந்த வேனில் நின்றபடி மக்கள் மத்தியில் பேசிய அவர், “ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் எங்கள் பக்கம்தான் இருக்கிறார்கள். அதிமுக பக்கம் இருப்பவர்கள் டெண்டர் பார்ட்டிகள்தாம். தேர்தல் முடிவுகள் தெரிந்து அதிமுகவில் இருப்பவர்கள் துக்கத்தில் இருப்பதுபோல இருக்கிறார்கள். தினகரா உன்னைத் தெரியாதா என்று தற்போது பழனிசாமி பேசுகிறார். அவர்தான் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் தொப்பி சின்னத்தில் எனக்குப் பிரச்சாரம் செய்தபோது, ‘தனக்கு பின்னால் நூறாண்டுகள் இந்த இயக்கம் இருக்கும் என்று ஜெயலலிதா சட்டப்பேரவையில் கூறியுள்ளார். அதற்காக ஜெயலலிதா விட்டுப் போனவர்தான் தினகரன்’ என்று பேசியிருந்தார். ஆனால், தற்போது தினகரன் 10 வருடங்கள் எங்கே போனார் என்று கேட்கிறார். அவர்களைப் போன்ற துரோகிகளின் சதி காரணமாக வெளியிலிருந்தேன். கட்சியைக் காப்பாற்ற வேண்டிய கடமை வந்ததால் திரும்பவும் வந்தேன்” என்றார்.

நாங்கள் பதவிக்காக அலைந்திருந்தால் பன்னீர்செல்வம் முதல்வர் ஆகியிருக்க முடியுமா? முதல்வராக்க அவர் என்ன பொருளாதார அறிஞரா என்று கேள்வி எழுப்பியவர், “எதிர்க்கட்சியான திமுகவையும் துரோகியான அதிமுகவையும் டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும். மே 23ஆம் தேதி துரோக ஒழிப்பு நாளாகக் கொண்டாடப்படக் கூடிய வகையில் செய்து காட்ட வேண்டும்” என்று தெரிவித்தார். கைரேகைத் தடுப்புச் சட்டம் குறித்து அதிமுகவினருக்கு என்ன தெரியும். பழனிசாமிக்குத் தெரிந்ததெல்லாம் காண்டிராக்டும் கமிஷனும்தான் என்றும் விமர்சித்தார்.

.

.

**

மேலும் படிக்க

**

.

**

[டிஜிட்டல் திண்ணை: சந்திரபாபு நாயுடு -துரைமுருகன் சந்திப்பு; ஸ்டாலின் நடத்திய விசாரணை!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/16/93)

**

.

**

[ரசிகர்களை ஏமாற்றிய மிஸ்டர் லோக்கல்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/16/70)

**

.

**

[ஓட்டப்பிடாரம்: வீட்டுக்கு வீடு அதிமுகவின் டெலிவரி அடையாளம்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/16/26)

**

.

**

[இந்தியன் 2 ஷங்கரின் அடுத்த பிளான்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/15/45)

**

.

**

[அஜித் 60ல் இணையும் இளம் இசையமைப்பாளர்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/15/72)

**

.

.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share