முன்னால போற வண்டி எல்லாம் யூ டர்ன் அடிச்சு திரும்பி போய்கிட்டே இருந்தாங்க.. என்ன குழி எதும் வெட்டி போட்ருக்காங்களான்னு பார்த்தா.. ஒரு டாடா சுமோ பஞ்சரானதும் ஓரமா நிப்பாட்டிட்டு அதுல வந்தவங்க எல்லாம் லிப்டு கேட்டு கைய காட்டிகிட்டு இருந்தாங்க. பறக்கும் படை தான் வண்டியை பிடிக்கிறாங்கன்னு அம்புட்டு பேரும் திரும்பி ஓடியிருக்காங்க. அப்ப இருக்குற வண்டி எல்லாம் பணத்தை தான் கொண்டு போறாங்களா.. நாம தான் பெட்ரோல் போட காசு இல்லாம வண்டியை கீழ சாய்ச்சு போட்டு ஆட்டி, ஓட்டிகிட்டு இருக்கோம் போல.
பஸ்ஸுல நம்ம ஆளுங்க டிக்கெட்டே எடுக்க மாட்டாங்க இன்னைக்கு நியூஸைப் பார்த்தா ஒரு பஸ்ஸுல 3 கோடி ரூபா இருந்துச்சாம்.. அன்னைக்கே நல்லா படிச்சுருந்தா பறக்கும் படை அதிகாரியாயிருக்கலாம். அத்தனை கோடியையும் முழுசா பார்த்துகிடலாம்ல. கடைசியா அருணாச்சலம் படத்துல பார்த்தது.. எந்த ஐடியில சரியான ட்விட் இருக்கும்னு பார்த்து தூக்குற இந்த குமாருக்கு ஆளைப் பார்த்து பிடிக்க தெரியாதா என்ன.. யாராவது அந்த அதிகாரி வேலைக்கு என்ன ரெக்கமண்ட் பண்ணுங்களேன்.. அதுக்கு முன்னால அப்டேட்டை பார்த்துடுங்க.
**@Kozhiyaar**
கைப்பேசியின் தொடு திரையில் பார்த்து பழகிய பின் காகிதத்தில் பார்ப்பதை கூட ‘Zoom’ செய்து பார்க்க முற்படுகின்றன விரல்கள்!!!
**@jacksparow3300**
ஓட்டு கேட்டு வரும்போது ஆராத்தி தட்டுக்கு 500 ரூபாய் வாங்கிட்டு…பாடுவோம் பாருங்க பாட்டு…
நீங்க நல்லாயிருக்கனும் நாடு முன்னேற….
**@itzkarthik_v**
“காலாவதியான பிரதமர் தினமும் பொய் பேச வேண்டாம்” : பிரதமர் மோடிக்கு பதிலடி கொடுத்த மம்தா
என்ன குருநாதா ஒரு ஏழைத் தாயின் மகன்னு கூட பாக்காம புது ஐட்டமா எடுத்து அடிச்சிருக்காங்க…!
**@mufthimohamed1**
உப்மாவுடைய தம்பிதான் சேமியா.
**@Kozhiyaar**
சமைத்துண்டு வாழ்வாரே வாழ்வர் மற்றெல்லாம்
ஸ்விக்கியில் ஆர்டர் செய்தே சாவர்!!
**@mekalapugazh**
இம்முறை நாம்தமிழர் வாக்குவிழுக்காடு கூடலாம்..ஆனால் சீட்டோ டெபாசிட்டோ வாங்குமளவு இருக்க வாய்ப்பில்லை.. அடுத்த தேர்தலில் தேமுதிக, பாமக வழியில் பேரம்பேச உதவலாம்..குறிப்பாக அதிமுகவிடம்..#தேர்தல்2019 ..அதற்குக்கூட வேலைக்காக மாட்டார்போல கமல்.
**@ItsJokker**
நாம கோவதித்தில சொல்றத “இவ்ளோ பேசுவியா”ன்னு சொல்லி பிரச்சினை பண்றதும்,
அவங்க கோவத்தில சொல்றத கேட்டா “இதை வச்சும் சண்டை போடுறேல்ல” னு சொல்லி சண்டை போடுறதும், டிசைன்ல இருக்கு..!!
**@Kozhiyaar**
பேங்க் அக்கவுண்ட்ல பணம் இல்லாதப்ப இஎம்ஐ குறுஞ்செய்தி வருவதெல்லாம், திகில் படத்திற்கு மேலான திகில் தரக் கூடிய சூழல்!!!
**@RahimGazzali**
வன்னியர் கல்வி அறக்கட்டளை புகாரை நிரூபிக்க ஸ்டாலின் தவறினால் அரசியலை விட்டு விலக தயாரா?- ராமதாஸ்.
வேல்முருகன் குற்றச்சாட்டோடு உங்க பொடனிக்கு பின்னாடிதான் நிற்கறார் ஓவர்.
**@Giri47436512**
மழை காலத்தில் தண்ணிய “சேத்து” வச்சு செய்யலைன்னா வெயில்காலத்துல தண்ணி
நம்மல சேத்து “வெச்சு” செய்யும்!!..
**@DinaMsdian**
திமிராகவே இருந்து விடுங்கள். இல்லையென்றால் இந்த உலகம் உங்களிடம் திமிரை காட்டும்…
**@mohanramko**
உடம்புக்கு நல்லது என்றாலும், ஒரு ‘ஓட்டை’ மட்டுமே பெறும் இட்லி தோற்றுவிடும். நிறைய ‘ஓட்டை’ பெறும் தோசை வெற்றி அடையும்… ..
இதுதான் தேர்தல் அரசியல்….
**@Annaiinpillai**
ஏன் சோகமா இருக்கன்னு கேட்டது தப்பா போச்சு சொந்த கதையும், சோக கதையும் சேர்ந்து மூன்று மணி நேரம் தாண்டி ஓடி கொண்டு இருக்கிறது!
**@mohanramko**
மாடி வீடு கட்றேன்னு, இருக்கும் ஓட்டு வீட்டை இடித்து, கூரை வீட்டில் வாழ வச்சிட்டு, வீட்லயே தங்காம, நல்லா டிரஸ் பண்ணிகிட்டு ஊர் சுற்றி வந்தா, உங்க மகனா இருந்தாலும் உங்களுக்கு கோபம் வரும் தானே?
குறிப்பு: இது அரசியல் பதிவல்ல
**@parveenyunus**
எதிர்க்கட்சிகளின் கையில் நாட்டை கொடுத்தால் நாடு சீரழிந்து விடும்-எடப்பாடி # பொள்ளாச்சியை சீரழிச்ச மாதிரியா..?
**@Annaiinpillai**
அரசியலில் வாய்ப்பு தர மணியன்கள் இருக்கும் வரை அமாவாசைகள் வந்து கொண்டு தான் இருப்பார்கள்!
**@subashmech0*
சார்லி சாப்ளின் செய்த காமெடியையும் மிஞ்சிவிடுகின்றது
“வேட்பாளர்களின் சொத்து விவரம்”
**@sultan_Twitz**
இரட்டை இலையும் மாம்பழமும் ஒன்று – ராமதாஸ் #
அடுத்து என்ன தாமரையும், மாம்பழமும் ஒன்று அதானே..?!
**@Annaiinpillai**
கண்ணாடிய திருப்புனா எப்படியா வண்டி ஓடும் என்ற நிகழ்வு நடக்காத வீடே இருக்காது!
#மூடநம்பிக்கை
-லாக் ஆஃப்
�,”