]அதிகரிக்கும் தொழில்நுட்ப வேலைகள்!

Published On:

| By Balaji

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு 2019இல் மீண்டும் தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலைவாய்ப்புகள் சிறப்பாக இருக்கும் என்று ஆய்வு ஒன்று கூறுகிறது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள *இந்தியா ஸ்கில்ஸ்*ஆய்வறிக்கையில், ‘தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலைவாய்ப்புகள் அடுத்த ஆண்டில் அதிகரிக்கும் என்று சுமார் 64 சதவிகித நிறுவனத் தலைவர்கள் (முதலாளிகள்) தெரிவித்துள்ளனர். 2018ஆம் ஆண்டில் எவ்வளவு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டதோ அதே அளவு வேலைவாய்ப்புகள் அடுத்த ஆண்டிலும் வழங்கப்படும் என்று 20 சதவிகித முதலாளிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல, புதிதாகப் பட்டம் பெற்றவர்களுக்கான வேலைவாய்ப்புகள் இந்த ஆண்டை விட அடுத்த ஆண்டில் இருமடங்கு உயர்ந்து 15 சதவிகித உயர்வைக் கொண்டிருக்கும்.

2010-11ஆம் ஆண்டில் இத்துறையில் இருந்த வேலைவாய்ப்பு உருவாக்கத்தை விடக் குறைவாக இருந்தாலும், மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததை விட வேலைவாய்ப்புகள் சிறப்பாகவே இருக்கும். வடிவமைப்பு மற்றும் பகுப்பாய்வு சார்ந்த வேலைகளுக்குத்தான் அடுத்த ஆண்டில் அதிக வாய்ப்புகள் இருக்கும். மென்பொருள், பொறியியல், ஆட்டோமோட்டிவ், பயணம், விருந்தோம்பல் உள்ளிட்ட துறைகளிலும் அடுத்த ஆண்டில் குறிப்பிடத்தகுந்த வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். சென்ற ஆண்டில் பெண்களுக்கான வேலைவாய்ப்புகள் 38 சதவிகிதம் வளர்ச்சி கண்டிருந்த நிலையில் அடுத்த ஆண்டில் இந்த அளவு 46 சதவிகிதமாக உயரும்’ என்று கூறப்பட்டுள்ளது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share