அணுக்கழிவு மையத்திற்கு எதிர்ப்பு: ஒன்றிணையும் எதிர்க்கட்சிகள்!

Published On:

| By Balaji

அணுக்கழிவு மையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 25ஆம் தேதி நெல்லையில் அனைத்துக் கட்சிகள் கலந்துகொள்ளும் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

கூடங்குளத்தில் 1000 மெகாவாட் திறன்கொண்ட இரண்டு அணு உலைகள் செயல்பட்டுவருகின்றன. இந்த நிலையில் இந்தியாவிலேயே முதன் முதலாக கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கப்படவுள்ளது. இதை அமைப்பதற்கான பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் ஜூலை 10ஆம் தேதி ராதாபுரத்தில் உள்ள என்.வி.சி. அரசு பள்ளியில் நடைபெறும் என தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. ஆனால் இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அணுக்கழிவு மையம் அமைப்பதால் தமிழகம் கடும் பாதிப்புகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளன.

இந்த சூழலில் அணுக்கழிவு மைய விவகாரம் தொடர்பாக சேப்பாக்கத்திலுள்ள சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று (ஜூன் 15) ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. பூவுலகின் நண்பர்கள் சார்பாக நடத்தப்பட்ட இக்கூட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லக்கண்ணு, விசிக தலைவர் திருமாவளவன், மமக தலைவர் ஜவாஹிருல்லா, அமமுக சார்பில் வெற்றிவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதன்முடிவில், “நிரந்தரக் கழிவு மையம் உருவாக்குவது தொடர்பாக தெளிவான திட்டத்தை மத்திய அரசு உருவாக்கும் வரையில் கூடங்குளத்தில் இரண்டு உலைகளிலும் மின் உற்பத்தியை நிறுத்த வேண்டும். அணுக்கழிவு மையம் அமைப்பதற்கான கருத்துக் கேட்புக் கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும்” என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

மேலும், கூடங்குளத்தில் மேற்கொண்டு நான்கு அணு உலைகள் கட்டுவதை கைவிட வேண்டும் என்றும், ஏராளமான பிரச்சினைகள், குழப்பங்களுடன் தத்தளிக்கும் கூடங்குளம் அணு உலையின் முதல் இரண்டு அலகுகள் குறித்து சார்பற்ற விசாரணை நடத்தி வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும், போராடியவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த கோரிக்கைகளுக்காக வரும் ஜூன் 25ஆம் தேதி நெல்லையில் அணுக்கழிவுத் திட்டத்திற்கு எதிராக அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

**

மேலும் படிக்க

**

**[டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கலைப்பு- ஸ்டாலினை குறிவைக்கும் வருமான வரித்துறை!](https://minnambalam.com/k/2019/06/14/65)**

**[தினகரன் தளபதிக்கு எடப்பாடி தூது: ஜெயக்குமார் எதிர்ப்பு!](https://minnambalam.com/k/2019/06/14/51)**

**[அதிமுக: அந்த 11 பேர் குழுவில் யார் யார்?](https://minnambalam.com/k/2019/06/13/22)**

**[மூடப்படும் அருவிகள்: கேரளத்தில் பண மழை!](https://minnambalam.com/k/2019/06/14/20)**

**[பாக்கியராஜ் அணிக்கு விஜயகாந்த் ஆதரவு!](https://minnambalam.com/k/2019/06/13/44)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share