அட்ஜஸ்மெண்ட் கேட்ட சீரியல் தயாரிப்பாளர் மீது வழக்கு பதிவு!

public

சினிமாவிலும், தொலைகாட்சி தொடர்களிலும் நடிக்க வரும் பெண்களிடம் தயாரிப்பாளர்கள் அட்ஜஸ்மெண்ட் செய்ய சொல்லி பாலியல் தொந்தரவு செய்வதாக சமீபத்தில் நிறைய செய்திகள் வருகின்றன. முன்பே இத்தகைய தொல்லைகள் இந்த துறைகளில் இருந்ததாகவும் தற்போது மீடியாவின் வீச்சு அதிகமாக இருப்பதால் இந்த மாதிரி விஷயங்கள் வெளியே தெரிவதாகவும் சில நடிகைகள் கருத்தும் தெரிவித்துள்ளனர். போன மாதம் கன்னட தயாரிப்பாளர் நடிக்க வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து பெங்களூரு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த மாதம் பிரபல இந்தி தொலைக்காட்சி தொடர் நடிகையான ஷில்பா ஷிண்டே தான் நடித்து வந்த தொடரின் தயாரிப்பாளர் பாலியல் ரீதியாக நிறைய தொந்தரவுகள் கொடுத்துள்ளதாக மும்பை அருகில் உள்ள வால்வி நைஜியன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில், அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குறிப்பிட்ட ஒரு நிகழ்ச்சியில் தொடர்ந்து நடிக்க வேண்டுமென்றால், தன்னுடன் இணக்கமாக இருக்க வேண்டும் என்று சஞ்சய் வற்புறுத்தியதாக நடிகை ஷிண்டேவின் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு தொடங்கப்பட்ட இந்த தொடரிலிருந்து ஷில்பா திடீரென்று நின்று விட்டதாகவும், அதனால் தனக்கு ரூ.12.5 கோடி நஷ்டம் ஏற்பட்டுவிட்டதாகும் தயாரிப்பாளர் கூறியுள்ளார். மேலும், ஷில்பாவின் தரப்பிலிருந்து எனக்கு ரூ. 32 லட்சம் தரவேண்டும் என்று தயாரிப்பாளர் கூறியுள்ளார்.

ஆனால், ஷில்பா கொடுத்த புகாரில், தயாரிப்பாளர் தன்னை செக்சியாகவும், அரைகுறை ஆடையுடனும் நடிக்க சொன்னதாகவும், சில நேரங்களில் தன்னை தொட்டு தொட்டு பேசி, தகாத முறையில் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், என்னுடைய அறைக்கு வந்து என்னுடன் உடலுறவு கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக தயாரிப்பாளர் மீத் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கும் பெண்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளைங்களிலும் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *