$டாப்சி மெனக்கட்டு தன்னை ஈடுபடுத்திக்கொண்டு நடித்த திரைப்படமான பிங்க் படத்துக்கு, சமூக விழிப்புணர்வைப் பேசியதற்கான சிறப்பு தேசிய விருது வழங்கப்பட்டிருக்கிறது.
[பிங்க் விமர்சனம் – எதற்காக இப்படி ஒரு படம்?](https://minnambalam.com/k/1475173861)
பிங்க் திரைப்படத்தில் நடித்ததோடு தன் வேலை முடிந்துவிட்டது என செல்லாமல் **அந்தப் படத்தில் நடித்தது தான் என் வாழ்வில் நான் செய்த முக்கியமான செயல்** என்று பேசும் டாப்ஸி இப்போது கிடைத்த தேசிய விருது பற்றி என்ன பேசியிருக்கிறார்?
உலகில் உள்ள அத்தனை அங்கீகாரத்துக்கும் தகுதியானது பிங்க் திரைப்படம் என்ற நம்பிக்கை எனக்கு எப்போதும் இருந்தது. என் நம்பிக்கையை உண்மை என உணர்த்திய தேசிய விருது தேர்வாளர்களுக்கு நன்றி. திறமையான ஒரு குழுவின் முயற்சிக்கு பாராட்டு கிடைத்திருப்பதாகவே நான் இதைப் பார்க்கிறேன். இந்தப் படம் எப்போதும் என் நினைவில் இருக்கும். ஒரு ஆர்ட்டிஸ்டாகவும், ஒரு மனிதியாகவும் என்னை அடுத்த லெவலுக்கு கொண்டுசென்ற திரைப்படம் பிங்க். இந்த தேசிய விருது, என் நம்பிக்கையை மேலும் வலுவாக்கியிருக்கிறது** என்று கூறியிருக்கிறார்.
பிங்க் திரைப்படத்துக்கு முதலில் கிடைத்த அங்கீகாரம் மக்களிடமிருந்து தான். படத்தைப் பார்க்கும் எந்த ஒருவராலும் அதைப்பற்றிப் பேசாமல் இருக்கமுடியவில்லை. ஒரு திரைப்படம் மனிதர்களிடமிருக்கும் ஏதோவொரு உணர்வை மீள்கொணர வேண்டும். கலையின் நோக்கமே அது தான். பிங்க் திரைப்படம் அதை சிறப்பாக செய்திருந்தது.�,