~அடுத்த ரவுண்டுக்குத் தயாரான சிவகார்த்திகேயன்

public

ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் சத்யராஜ் நடித்து வெளியாகவிருக்கும் ‘கனா’ திரைப்படம் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகி வருகிறது. இந்தப் படம் மகளிர் கிரிக்கெட் சார்ந்த படமாக எடுக்கப்பட்டுள்ளது. மகளிர் கிரிக்கெட்டில் நேரும் பிரச்சினைகள், பெண்களுக்கு விளையாட்டில் மறுக்கப்படும் உரிமைகள் பற்றி இந்தப் படம் பல்வேறு கோணத்தில் கூறவுள்ளது. இதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் தனது சொந்தத் தயாரிப்பில் இரண்டாவது படத்தை தயாரிக்கவிருக்கிறார். இதில் ஹீரோவாக விஜய் டிவி புகழ் ரியோ ராஜ் நடிக்கிறார்.

இந்த அறிவிப்பை நேற்று சென்னை சத்யம் தியேட்டரில் நடந்த ‘கனா’ படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். இந்தப் படத்தை ப்ளாக் ஷீப் குழு இயக்கவிருக்கிறது. சுட்டி அரவிந்த், ஆர்ஜே விக்னேஷ், அன்புதாசன் உட்பட 20 பேர் கொண்ட பிளாக் ஷீப் குழுவை மேடையில் சிவகார்த்திகேயன் அறிமுகப்படுத்திப் பேசுகையில், “நான் சம்பாதிக்கும் காசு எனக்கு மட்டுமல்லாமல் என்னுடன் இருப்பவர்களுக்கும் பிரயோஜனமாக இருக்க வேண்டும். என்னால் முடிந்தவரை இதுபோன்று சினிமாவில் இருப்பவர்களை முன்னேற்ற முயற்சி செய்வேன். அதற்காகத்தான் இம்மாதிரியான படங்களைத் தொடர்ந்து தயாரித்து வருகிறேன்” என்று கூறினார்.

அரசியல், நக்கல் நையாண்டி எனப் பல தளங்களில் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனர் பிளாக் ஷீப் குழுவினர். பிளாக் ஷீப் குழுவினர் ஏற்கெனவே ஹிப் ஹாப் ஆதியின் மீசைய முறுக்கு திரைப்படத்தில் நடித்திருந்தனர். இப்போது பிளாக் ஷீப் குழுவினரிடம் முழு படத்தையுமே ஒப்படைத்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.

மேலும் கனா படம் எப்படி உருவானது என்பதைப் பற்றி பேசும்போது, “தயாரிப்பாளர் என்று போட வேண்டிய கிரிடிட் தான். ஆனால், நான் எப்போது வேலைக்காரன். அப்படி இருக்க வேண்டும் என்று ஆசைப்படுறேன். இந்தப் படம் எப்படி ஆரம்பமானது என சொல்லணும், அருண் ராஜா வந்து ஒவ்வொரு முறையும் பாட்டெழுதி ஹிட்டாகும்போது வாழ்த்துவதைத் தாண்டி திட்டுவேன். இதுலேயே கம்பெர்ட் ஆகிறாதே, நீ இயக்குநர் ஆகணும்னு வந்த, அந்த வேலையும் பார்ன்னு.அவருக்கு ஏதாவது ஐடியா கொடுக்கணும், பண்ண வைக்கணும்னு நினைத்தேன். கிரிக்கெட் வைத்து ஒரு கதை பண்ண சொன்னேன். அதுவும் ஊரில் விளையாடும் கிரிக்கெட் மாதிரி. ஒரு நாலு நாளைக்குப் பின்னாடி, ‘இன்டர்நேஷனல் கிரிக்கெட்டை வைத்து பண்ணலாம். ஆனால், அது வுமன்ஸ் கிரிக்கெட்’ என்று சொன்னபோது, ஏன் இப்படி பண்ற, அதுக்கு நடிக்கிறதுக்கு எல்லாம் இங்க ஆள் எல்லாம் கிடையாது, எப்படி பண்ண முடியும் என்று கேட்டேன். அதுக்கு அருண்ராஜா, இதை டெவலப் செய்துவிட்டு சொல்றேன்னு சொல்லிட்டு போனார்.

அதன் பின்னர் ஒரு விவசாயியின் மகள் இன்டர்நேஷனல் கிரிக்கெட் விளையாடுவதாகக் கதையின் லைனை அருண்ராஜா சொன்னார். இந்தக் கதையை கேட்கும்போது, நான்தான் தயாரிக்கணும்னு முடிவு செஞ்சுட்டேன். ஆனா அருண்ராஜா கிட்ட இதை சொல்லல. ஏன்னா அவனிடம் தேடல் இருந்து கொண்டே இருக்க வேண்டும். இதைப் போய் புரொடியூசர்கிட்ட சொல்லணும். அவங்க ஒப்புக்கணும் என நினைத்தேன். அந்தத் தேடலின்போது நான் தயாரிக்கிறேன் என்று சொன்னேன். அப்படிதான் இந்தப் படம் தொடங்கியது” என்று கூறினார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0