ஆன்லைன் தொடர்பான சீர்திருத்தங்களால்தான் எளிதாகத் தொழில் தொடங்கும் மாநிலங்களுக்கான பட்டியலில் தமிழ்நாடு பின்தங்கியுள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
2017ஆம் ஆண்டுக்கான தொழில் துறை சீர்திருத்த ஆய்வறிக்கையை ஒன்றிய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சகம் ஜூலை 9ஆம் தேதி வெளியிட்டது. இந்த ஆண்டுக்கான பட்டியலில் தமிழ்நாடு 90.68 விழுக்காடு மதிப்பெண்ணைப் பெற்று 15ஆவது இடத்தில் இருக்கிறது. இந்தப் பட்டியலில் தமிழ்நாடு 2016ஆம் ஆண்டில் 62.8 விழுக்காடு மதிப்பெண்ணுடன் 18ஆவது இடத்தில் இருந்தது. அடுத்த ஆண்டுக்கான பட்டியலில் தமிழ்நாடு ஏற்றும் காணும் என்று தொழில் துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தமிழக தொழில் துறை மூத்த அதிகாரி ஒருவர் தி இந்து ஆங்கில ஊடகத்துக்கு அளித்துள்ள பேட்டியில், தொழில் துறைப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் அண்மையில் ஆன்லைன் மயமாக்கப்பட்டுள்ளன. மேலும், இத்துறைகளுக்கான தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களும் மேம்படுத்தப்பட்டுள்ளன. இவற்றுக்குப் பிறகு சில நாட்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதால் தமிழகம் பின்னடைவைக் கண்டிருக்கலாம். எனவே அடுத்த ஆண்டுக்கான இந்தப் பட்டியலில் தமிழ்நாடு முன்னேற்றம் காணும்” என்று கூறியுள்ளார்.
2017ஆம் ஆண்டுக்கான பட்டியலைப் பொறுத்தவரையில் தென்மாநிலங்களின் ஆதிக்கம் அதிகமாகவே காணப்படுகிறது. முதலிடத்தில் ஆந்திரப் பிரதேசமும், இரண்டாவது இடத்தில் தெலங்கானாவும் உள்ளன. எட்டாவது இடத்தில் கர்நாடகா உள்ளது. ஆந்திராவும், தெலங்கானாவும்தான் கடந்த ஆண்டும் இந்தப் பட்டியலில் முன்னிலை வகித்தன. “மின் விநியோகம், சாலை வசதிகள் மற்றும் துறைமுக வசதிகள் இந்த ஆய்வில் கணக்கில் கொள்ளப்படவில்லை” என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.�,”