அடுத்து பிக்பாஸ் அணிகள் இணைப்பு நடக்குமோ?:அப்டேட்குமாரு

public

என்ன தான் பிரெண்ட்ஷிப் டேவே இருந்தாலும் இந்த அளவுக்காய்யா பொங்க வைக்கிறது. பேஸ்புக், டிவிட்டர் பக்கம் போக முடியலை. வாழ்த்து சொல்றோம்ங்கிற பேருல சாவடிக்குறாங்க. ஆமா இவ்வளவு நாள் எங்க தான்ய்யா இருந்தீங்க. ஆத்திர அவசரத்திற்கு போன் போட்டா கூட எடுக்காதவங்கள்லாம் ‘என் நண்பன் போட்ட சோறு தினமும் தின்னேன் பாரு’ன்னு பாட்டுலாம் ஷேர் பண்ணுறாய்ங்க. இவங்க அலப்பறையில ஓவியாவை நினைச்சா தான் கவலையா இருக்கு. தானை தலைவி ஓவியா வெளியேறுன உடனே பிந்து ஆர்மி, ரைஸா ஆர்மினு யாரோ ஆரம்பிக்க போறதா தகவல் வருது. அப்படி ஆரம்பிச்சீங்கன்னா அவங்கள ஓவியா ஆவி மன்னிக்கவும் ஓவியா ஆர்மி சும்மா விடாது. பி கேர் ஃபுல். அப்புறம் பாஸ், ப்ளீஸ் அப்டேட் கீழ இருக்கு பார்த்துடுங்க.

taraoffcl

நேத்து ஒரு கிழவி சொல்லுது…சாகுற வயசுல எனக்கு எதுக்கு பா ஆதார்ன்னு

பாட்டிக்கு சொன்னேன் … எடுத்து வை இல்லனா சாக கூட விடமாட்டங்கன்னு

**udanpirappe**

நான் தூக்கி வளர்த்த குழந்தை ,ஓவியா -வைகோ !!!

**ikrthik**

தன்னைப்போலவே கிறுக்கர்களை சந்தித்ததும் மனம் உடனே நட்புகொள்கிறது.

**Periyar Kumar**

தலித் வீட்டில் சாப்பிடுவேன்

– தமிழிசை.

அது இருக்கட்டும்,உங்க வீட்டுலே சங்கராச்சாரியார் சாப்பிடுவாரா?

**karthik_twittz**

எந்தவித வேண்டுதல்களும் இல்லாமல் உண்டியலில் காசு போட குழந்தைகளால் மட்டுமே முடிகிறது…!

**naatupurathan**

உயிரோடு இருப்பவர்களுக்கு ரேஷன் பொருட்கள் இல்லைனு ஒரே வார்த்தைல சொல்லிட்டுப் போங்கய்யா…!!!

**kanavulagavaasi**

வடிவேலுவின் வெற்றிடத்தை பழைய வடிவேலுவே நிரப்பிக்கொண்டிருக்கிறார்.

**thoatta**

கிராம மக்கள் மனசுல MGRக்கு பிறகு அசைக்கமுடியாத இடம் சன்டிவிக்கு தான். ஆயிரம் சேனல்கள் இருந்தாலும் நட்சத்திர கபடில தான் குத்த வைக்கிறாங்க

**idumbaikarthi**

கமலஹாசனுக்கு டாக்டர் பட்டம் கொடுத்தது தப்பாப்போச்சு!

ஏன் என்னாச்சு?

எப்பப் பாரு. புரியாத மாதிரியே எழுதிக்கிட்டு இருக்காரு!

**BoopatyMurugesh**

ஓவியா (Praying) : கர்த்தரே தோத்தரம்..

ஜூலி : அக்கா ! காயத்ரி தோத்துரும்ன்னு சொன்னாக்கா..

#BiggBossTamil

**Poongodi Flower**

மாசக்கணக்கா பேசாம இருக்குறது. இப்போ வந்து ஆப்பி பிரண்ட்ஷிப் டே சொல்ட்றது.

**HAJAMYDEENNKS**

வீட்டுக்கு வரும் உறவினர்களை மொபைல் சார்ஜர்களுடன் வரவேற்கும் காலமிது…!

**Kozhiyaar**

புரட்சி செய்தால் ட்விட்டரில் ‘ரீடிவிட்’ கிடைக்கும், ஆனால் உண்மையில் ‘ரிவீட்’ தான் கிடைக்கும்!!!

**manipmp**

“நீயெல்லாம் எப்பிடி உருப்பட்ட” என ஆச்சர்யமாய் பார்க்கும் இடம்தான் சொந்த ஊர்

**thoatta**

ஆனாலும், பொண்ணுங்க மேல அன்பை கொட்டுறதுல சிநேகன் ஒரு Slimமான டி.ராஜேந்தர்

**yugarajesh**

சொந்த ஊர் மக்களின் குடிநீருக்காக தன்னோட கிணறை தரமறுப்பவர் தான்

நாட்டுமக்களின் குடிநீர் பிரச்சனைக்காக போராட்டம் நடத்துறாப்டி# தர்மயுத்தம்

**Kozhiyaar**

மருத்துவமனைகள் ஞாயிற்றுக்கிழமைகளில் நிரம்பி வழிகின்றன, நோயாளிகளால் அல்ல பார்க்க வரும் உறவினர்களால்!!

**kumarfaculty**

ஒரு மொபைல் பேட்டரி தரும் நம்பிக்கையைக் கூட இக்கால மனிதர்களால் தர முடிவதில்லை…!!!

**Scientist_Mani**

உறவுகளே நீங்க திடீர்னு வந்து சப்ரைஸ் கொடுக்குறதவிட, ஒரு சிக்கன் ரைஸ் வாங்கி தரலாம்

வயிராவுது ஃபுல் ஆகும்

– ப்ரெண்ட்ஷிப் டே அலப்பறைஸ்

**Villavan Ramadoss**

மொட்டபாஸ் சிந்தனைகள்.

கலவரம் பண்ணி கொல்றோம், ஆதார் இல்லன்னா இறப்பு சான்றிதழ் கிடையாதுன்னு சொல்றோம். கலவர பலிகளின் ஆதார் விவரங்களை அழிக்கிறோம். கடைசில கலவரத்தால சாவு நடக்கலன்னு நிரூபிக்கிறோம்.

ஜெய் சைக்கோஜி.

**100% சிரிப்பு இலவசம்**

அம்மா : டேய்… கல்யாணத்துக்குப் பிறகு, கடைக்குப்

போறது, மார்க்கெட்டுக்குப் போகிற வேலையெல்லாம்

நீ செய்யாதே.. உன் மனைவியைச் செய்யச் சொல்லி

ஆரம்பத்திலேயே உன் கண்ட்ரோலில் வை.

மகன் : சரிம்மா..

அப்பா : இந்த அட்வைஸை என் கல்யாணத்தப்ப என்

அம்மா சொன்னாங்க… நான் கேட்கலை. அதான் இப்ப

பையும் கையுமா அலையுறேன். நீயாவது ஜாக்கிரதையா

இரு…!

-லாக் ஆஃப்

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *