[அஞ்சல் தேர்வுகள் தமிழில் தொடருமா?

Published On:

| By Balaji

வரும் ஆண்டுகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் தமிழில் நடத்தப்படுமா என்பது குறித்து வரும் 23ஆம் தேதி மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய அஞ்சல் துறையில் நடைபெறும் தேர்வுகள் ஆங்கிலம், இந்தி மற்றும் 15 பிராந்திய மொழிகளில் நடத்தப்பட்டு வந்தன. ஆனால், ஜூலை 14ஆம் தேதி நடைபெற்ற அஞ்சல் துறை முதல் தாளுக்கான தேர்வுகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடைபெற்றன. முன்னதாக தமிழில் அஞ்சல் தேர்வுகள் நடத்தப்படாததற்குத் தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பு எழுந்தது. அஞ்சல் தேர்வை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கும் தொடரப்பட்டது. அதில் தேர்வு முடிவுகளை வெளியிட மட்டும் தடை விதித்தது நீதிமன்றம். அதனால் வழக்கம்போல அஞ்சல் தேர்வுகள் நடைபெற்றன.

இதற்கிடையே நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் தந்த கடும் அழுத்தத்தின் காரணமாக அஞ்சல் துறைக்கு ஜூலை 14ஆம் தேதி நடந்த தேர்வுகளை ரத்து செய்வதாக அறிவித்த மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் வழக்கம் போல தேர்வு நடைபெறும் எனவும் தெரிவித்தார்.

இந்த நிலையில் அஞ்சல் துறை தேர்வுகளைத் தமிழில் நடத்துவது தொடர்பாக திமுக சார்பில் நீதிபதி மணிக்குமார் அமர்வு முன்பு நேற்று முறையிடப்பட்டது. இதை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதாகவும், 23ஆம் தேதி விசாரிப்பதாகவும் நீதிபதிகள் உறுதியளித்தனர். அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “கடந்த 14ஆம் தேதி நடந்த அஞ்சல் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பிராந்திய மொழிகளில் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மாநிலங்களவையில் அறிவித்துள்ளார்” என்ற தகவலைத் தெரிவித்தார்.

இதனையடுத்து நீதிபதிகள், “தமிழில் அஞ்சல் தேர்வுகள் நடைபெறும் என்ற அறிவிப்பு இந்த ஆண்டுக்கு மட்டும்தானா அல்லது எதிர்வரும் ஆண்டுகளில் நடத்தப்படும் அனைத்து தேர்வுகளுக்கும் பொருந்துமா என்பது குறித்து ஜூலை 23ஆம் தேதி விளக்கம் அளிக்க வேண்டும்” என்று மத்திய அரசு தரப்புக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

**

மேலும் படிக்க

**

**[ அடிக்கப் பாய்ந்த சத்யா – அடக்கிய சேகர்பாபு: சட்டமன்ற காட்சிகள்!](https://minnambalam.com/k/2019/07/18/25)**

**[டிஜிட்டல் திண்ணை: ரஜினி Vs ஸ்டாலின் -ஜோதிடர் மூட்டிய கலகம்!](https://minnambalam.com/k/2019/07/18/82)**

**[அத்திவரதர்: வரிச்சியூர் செல்வத்துக்கு பாஸ் கொடுத்தது யார்?](https://minnambalam.com/k/2019/07/18/54)**

**[மாசெக்களுக்கு தெரியாமல் உதயநிதி நடத்தும் புது ஆபரேஷன்!](https://minnambalam.com/k/2019/07/18/45)**

**[மணிரத்னம் – நயன்: உருவாகும் வித்தியாசமான கூட்டணி!](https://minnambalam.com/k/2019/07/17/20)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share