அஜித்தின் பார்வையில் பெண்கள் – காயத்ரி விளக்கம்!

public

சார்லி சாப்ளின், ஸ்டைல், பரசுராம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடன மாஸ்டர் காயத்ரி ரகுராம். இவர், பிரபல நடன இயக்குநர் ரகுராம் அவர்களின் மகளுமாவார். பல படங்களில் கெஸ்ட் ரோலிலும் நடித்துள்ள அவர் பாலாவின் தாரை தப்பட்டை படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தார். அதையடுத்து தற்போது நடனமாடும் பெண்களின் வாழ்க்கையை மையமாகப் பேசும் ‘யாதுமாகி நின்றாய்’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

தற்போது அனைவரும் அஜித்தின் விவேகம் பட டீசருக்காக வெறித்தனமாகக் காத்துக் கொண்டிருக்கின்றனர். நாளை(மே 11ம் தேதி) டீசர் வெளியாகிறது என்று இயக்குனர் சிவா கூறியிருந்தார். இந்த நிலையில் நடன அமைப்பாளர் காயத்ரி ரகுமான் ட்விட்டரில் தன்னுடைய ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ஒரு ரசிகர் அஜித்தைப் பற்றி கூறுங்கள் என்று கேட்க, அவர் **தல மிகவும் நல்ல மனிதர். எல்லா இளைஞர்களும் பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என்பதை அஜித்தைப் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும்** என்று கூறினார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *