^அச்சம் தரும் கல்விக்கொள்கை: சூர்யா

Published On:

| By Balaji

மத்திய அரசு கொண்டுவரும் புதிய கல்விக்கொள்கையை எதிர்த்து நடிகர் சூர்யா தொடர்ந்து பேசிவருகிறார்.

புதிய கல்விக்கொள்கையில் உள்ள அபாயங்கள் குறித்து மாணவர்கள், பெற்றோர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக அதை தமிழில் மொழிபெயர்த்து அனைவரும் படிக்கும்படி செய்ய வேண்டும் என சூர்யா ஏற்கெனவே வலியுறுத்தியிருந்தார்.

சிவக்குமார் கல்வி அறக்கட்டளை சார்பாக பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகைகள் வழங்கப்பட்டுவருகின்றன. இந்த விழா சென்னை சாலி கிராமத்தில் இன்று (ஜூலை 13) நடைபெற்றது. விழாவில் சிவக்குமார், சூர்யா, கார்த்தி, கல்வியாளர்கள் வசந்தி தேவி, மாடசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தற்போது இந்நிகழ்வில் பேசிய சூர்யா, “புதிய கல்விக்கொள்கை வரைவு குறித்து பெரும்பாலான மாணவர்கள், பெற்றோர்களுக்கு தெரியவில்லை. பெரும்பாலானோர் புதிய கல்விக்கொள்கை வரைவு குறித்து பேசாதது வருத்தமளிக்கிறது.

அதேபோல குறைவான ஆசிரியர்கள் கொண்ட பள்ளிகள் மூடப்படும் என்று கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரைத்திருப்பது சரியல்ல. அந்தப் பள்ளிகளை தரம் உயர்த்தாமல் பள்ளிகளை மூடினால் கிராமங்களில் இருக்கும் மாணவர்கள் எங்கு செல்வார்கள். அனைவருக்கும் சமமான கல்வியை வழங்காமல் நுழைவுத்தேர்வு நடத்துவது ஏன்?

அனைவரும் அமைதியாக இருந்தால் புதிய கல்விக்கொள்கை வரைவு நம்மீது திணிக்கப்படும். கல்வி முறையில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை அனைவரும் உணர வேண்டும். நாம் அனைவரும் விழித்துக்கொள்ள வேண்டும். புதிய கல்விக்கொள்கை வரைவு குறித்து அனைவரும் தங்களது கருத்தினை தெரிவிக்க வேண்டும்.

ஆரம்பக் கல்வியிலேயே மூன்று மொழிகளை திணிக்கக் கூடாது. மாணவர்களால் அதை படிக்க முடியாது. மேலும் புதிய கல்விக்கொள்கையில் 5ஆம் வகுப்பில் அரசுத் தேர்வு என்று பரிந்துரைத்துள்ளனர். அப்படி செய்தால் பள்ளி இடைநிற்றல் அதிகரிக்கும். யாரும் படிக்க மாட்டார்கள்.

ஆசிரியர்களே இல்லாமல் படிக்கும் மாணவர்கள் எப்படி நீட் உள்ளிட்ட தேர்வுகளை எழுத முடியும். அதிகளவில் தேர்வுகளை மாணவர்கள் மீது திணிக்கக்கூடாது. நீட் தேர்வால் பயிற்சி மையங்கள்தான் அதிகரிக்கும். நீட் தேர்வு பயிற்சி மையங்களின் தற்போதைய ஆண்டு வருமானம் ரூ.5000 கோடி. எதிர்காலத்தில் தேர்வு பயிற்சி மையங்கள் காளான்கள் போல முளைக்கும். படிப்பதற்கு உரிய வசதிகள் செய்து தராமல் தேர்வுகள் வைப்பது மட்டும் எப்படி நியாயம்?

புதிய கல்விக்கொள்கை வரைவில் சில நல்ல அம்சங்கள் இருந்தாலும் அச்சம் தரக்கூடிய அம்சங்கள் பல இருக்கின்றன” என்று கூறியுள்ளார்.

**

மேலும் படிக்க

**

**[அவசரப்பட்டுவிட்டேனோ? புலம்பிய தங்கம்](https://minnambalam.com/k/2019/07/13/18)**

**[நிர்வாகிகள் விலகுவதை தடுக்க…சசிகலா போட்ட பட்ஜெட்!](https://minnambalam.com/k/2019/07/13/7)**

**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**

**[ மோடிக்கு தயாநிதியை தூது அனுப்பினாரா ஸ்டாலின்?](https://minnambalam.com/k/2019/07/12/24)**

**[டிஜிட்டல் திண்ணை: ஆட்சியைக் கவிழ்க்க ஸ்டாலின் மீண்டும் முயற்சி!](https://minnambalam.com/k/2019/07/12/87)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share