[அசையும் படத்தின் அறிமுகக் காட்சி!

Published On:

| By Balaji

முகேஷ் சுப்ரமணியம்

லூமியர் சகோதரர்கள் முதன்முறையாக அசையும் படத்தை விஞ்ஞானிகளுக்குக் காட்டிய தினம் இன்று (ஜூலை 11).

சரியாகச் சொல்வதெனில் 124 ஆண்டுகளுக்கு முன், இன்று நம் வாழ்வின் அங்கமெனக் கருதும் சினிமா என்ற பெரும் ஊடகத்தின் அரிச்சுவடே இல்லாத காலமது. புகைப்படங்கள், ஓவியங்கள் போன்ற கலைகள் இயற்கையை, மனிதனைச் சலனமற்ற தன்மையில் பிரதிபலித்த போது, லூமியர் சகோதரர்கள் (அகஸ்டே, லூயிஸ்) மட்டும் மனித சலனத்தை, இயற்கையின் சலனத்தைப் படம் பிடிக்க முடியும் என்று திடமாக நம்பினர்.

அவர்களது விடாமுயற்சியின் பலனாக லூமியர் சகோதரர்கள் அறிவியலாளர்களுக்குத் திரைப்படத் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்திய தினம் இன்று. விஞ்ஞானிகளுக்கு அவர்களின் கண்டுபிடிப்பின் முடிவுகளைக் காண்பிப்பது லூமியர் சகோதரர்களுக்கான முதல் திட்டமாகும். அதன்படி 1895ஆம் ஆண்டு *Workers Leaving the Lumière Factory* என்ற முதல் அசையும் படத்தைத் திரையிட்டனர்.

மதிய உணவு இடைவேளைக்கு லூமியர் தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் பணியாட்களைப் பதிவு செய்த காட்சி அது. திட்டமிட்டபடியே இந்த வரலாற்றுத் திரையிடல் வெற்றியை அடைய அதன் பின் நிகழ்ந்ததெல்லாம் வரலாறு. கட்டடக்கலை, சிற்பம், ஓவியம், இலக்கியம், இசை, நிகழ்த்துக் கலை (நடனம், நாடகம் உள்ளிட்ட கலைகள்) என்றிருந்த கலைகளின் பாரம்பரிய உட்பிரிவுக்குள் சினிமாவும் தன்னை ஏழாவதாக இணைந்து கொண்டது.

சினிமாவின் தந்தையாகப் போற்றப்படும் லூமியர் சகோதரர்களும் இக்கலை மீதான தங்களது தனித்த பார்வையைக் கொண்டிருந்தனர் என்பதை மறுப்பதற்கில்லை. அகஸ்டே சினிமாவை ஒளிப்பதிவுக் கருவி என்ற அறிவியல் கண்ணோட்டத்தோடு நோக்கினார். அதே நேரத்தில், லூயிஸ் ஒளிப்பதிவுக் கருவியின் மூலம் தயாராகும் திரைப்பட உருவாக்கத்தை ரசித்தார்.

ஆனாலும் லூயிஸால் சினிமா அடையப்போகும் அசுர வளர்ச்சியைக் கணிக்க முடியவில்லை என்று தான் சொல்லத் தோன்றுகிறது. அப்படியிருந்திருந்தால் அவரால், ‘சினிமா என்பது எதிர்காலம் இல்லாத கண்டுபிடிப்பு’ எனக் கூறியிருக்க முடியுமா?

**

மேலும் படிக்க

**

**[வைகோவுக்கு இன்னொரு செக்!](https://minnambalam.com/k/2019/07/10/78)**

**[ராஜ்யசபா தேர்தல் நடக்காது!](https://minnambalam.com/k/2019/07/10/51)**

**[டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக இடப்பட்ட உத்தரவு!](https://minnambalam.com/k/2019/07/10/80)**

**[பதவி விலகத் தயார்: அமைச்சர்!](https://minnambalam.com/k/2019/07/10/54)**

**[இளைஞரணியில் உதயநிதி செய்யும் மாற்றம்!](https://minnambalam.com/k/2019/07/09/22)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share