அக்பர் விவகாரத்தில் அரசு சொல்ல ஒன்றும் இல்லை : உமா பாரதி

public

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய அமைச்சர் அக்பர் விவகாரத்தில் அரசு சொல்வதற்கு எதுவும் இல்லை என்று மத்திய குடிநீர் மற்றும் துப்புரவுத் துறை அமைச்சர் நேற்று (அக்டோபர் 12) தெரிவித்துள்ளார்.

மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சராக உள்ள எம்.ஜே. அக்பர் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்தார். ஏசியன் ஏஜ் நாளிதழின் ஆசிரியராக எம்.ஜே. அக்பர் பணிபுரிந்த காலத்தில் (1995) அவரைப் பேட்டி எடுக்கச் சென்ற போது தமக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்று அவர் பதிவிட்டுள்ளார். இதேபோல் மேலும் சில பெண் பத்திரிகையாளர்களும் அக்பர் மீது புகார் கூறியுள்ளனர். இதையடுத்து அவர் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து நேற்று (அக்டோபர் 12) கருத்து தெரிவித்த மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அதவாலே “ அமைச்சர் .அக்பர் தற்போது வெளிநாட்டில் இருக்கிறார். இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக அவரது விளக்கத்தையும் நாம் கேட்க வேண்டும். பின்னர் இந்த விவகாரத்தில் விசாரணை நடத்த வேண்டும். அதில் இந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவர் பதவி விலக வேண்டும்” என்று கூறியுள்ளார்.

அதுபோன்று நேற்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் உமா பாரதி, “குற்றச்சாட்டுக்கு ஆளான அக்பர் மத்திய அரசில் அங்கம் வகிக்காத போது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதனால், இது அந்தப் பெண்ணுக்கும், அக்பருக்கும் இடையிலான விஷயம். இதுதொடர்பாக அரசு சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்று கூறியுள்ளார்.

தற்போது அக்பர் வெளிநாட்டுச் சுற்றுப்பயணத்தில் உள்ளார். அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுத் தொடர்பாக இதுவரை அவர் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் நைஜீரியாவில் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு நேற்று முன்தினம் (அக்டோபர் 11) இந்தியாவுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது ஈக்வடோரியல் கினியாவுக்குச் சென்றுள்ள அவர் நாளை இந்தியாவுக்குத் திரும்புவார் என்று கூறப்படுகிறது.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *