ஃபேஸ்புக் திரையெல்லாம் இரும்புத்திரை: அப்டேட் குமாரு

Published On:

| By Balaji

நல்லா போயிக்கிட்டு இருந்த ஃபேஸ்புக்குல நேத்து சாயங்காலத்துல இருந்து திடீர்னு என்னோட அக்கவுண்டை ஹேக் பண்ணிட்டாங்க… அவரோட அக்கவுண்டை ஹேக் பண்ணிட்டாங்க…னு ஆளாளுக்கு போஸ்ட்டுகளைப் போட்டு பறக்கவிட்டுக்கிட்டு இருந்தாங்க. இம்புட்டுப்பேரு அக்கவுண்டையும் ஹேக் பண்ணுற அளவுக்கு அவ்வளவு வெட்டித்தனமாவா இருக்காங்கனு ஒரு டவுட்டு இருந்துச்சு. அப்புறம் பெருசா கண்டுக்கலை.

கொஞ்ச நேரம் கழிச்சுப் பார்த்தா ஹேக் ஆயிடுச்சுன்னு பல பேரு இரும்புத்திரை படம் பார்த்த எஃப்பெக்டுல ரொம்ப சீரியஸாவேகூட போஸ்ட்டுகளைப் போட ஆரம்பிச்சிட்டாங்க. என்னடா இதுன்னு ட்விட்டர் பக்கம் வந்து செக் பண்ணிப் பாத்தா ஃபேஸ்புக் டவுன்ங்கிற ஹேஸ்டேக் வேர்ல்டு ட்ரெண்டிங்க்ல முதல் இடத்துல இருக்கு. அதாவது உலகம் முழுக்கவே ஃபேஸ்புக் சைட் டவுன் ஆகியிருந்திருக்கு, இதான் மேட்டர்.

அதை என்னான்னுகூட தெரிஞ்சிக்காம நம்ம ஆளுங்க அதுக்குள்ள யூ டர்ன் போட்டு, டேபிளை உடைச்சு இம்புட்டு அக்கப்போரும் பண்ணிருக்காங்க. இதுக்கு இடையில அய்யய்யோ… வேற, அம்மம்மா… வேற.

ஹ்ம்ம், என்னத்த சொல்றது… இனிமேல் ஃபேஸ் புக் டவுன் ஆச்சுன்னா குறைஞ்ச பட்சம் என்னா மேட்ருனாவது கொஞ்சம் தேடிப் பாருங்க அய்யாக்களே…

**@rahimgazali**

எடப்பாடியால் 20 நிமிடம்கூட ஒதுக்கி பார்க்க முடியாத இடத்தில்தான் மக்கள் தங்களின் வாழ்வாதாரங்களை இழந்து, மின்சாரமின்றி, நீரின்றி, உணவின்றி 24 மணி நேரமும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

**@Thaadikkaran**

போன் கண்டுபிடிச்சது வேணா இங்கிலீஸ்காரனா இருக்கலாம் ஆனா போனே திருப்பி வச்சு பேசுனாத்தான் சத்தமா கேட்கும்னு கண்டுபிடிச்சது நம்மூர்காரங்கடே..!

**@mufthimohamed1**

“ஜீ பூம் பா” என்றவுடன் மின்கம்பங்களை நடமுடியாது” – எடப்பாடி பழனிசாமி #

ஆமா பேனர மட்டும்தான் கிழிக்க முடியும்.

**@udaya_Jisnu**

“விவசாயி, சோறு போட்டாங்க”, அவ்ளோலாம் யோசிக்க வேண்டாம், அஞ்சு நாள் முன்னாடி வரை நம்மள மாதிரி சந்தோஷமா இருந்தவங்க, இன்னிக்கு பழைய பேனருக்காகவும், பிஸ்கட்டுக்காகவும் காத்துட்டிருக்காங்க, நம்மாள முடிஞ்ச உதவிய செய்வோம், அத பத்தியே பேசனும்னு இல்ல, அத பத்தியும் பேசுவோம் #SaveDelta

**@indhiratweetz**

ஊர்ல இருக்க அம்புட்டுப்பேரும் கஜாவால ஏற்பட்ட பாதிப்புக்கு உடல் உழைப்பையோ பண உதவியையோ செஞ்சுட்டு இருக்காங்க. போன மாசம் முழுக்க லேப்டாப், ஃபேன், மிக்சியெல்லாம் உடைச்சிட்டு வாய்ச்சவடால் அடிச்சுகிட்டிருந்த சுள்ளான் க்ரூப்ஸை யாராவது பாத்தீங்களா?

**@TalksssTweet**

டீவியும் ஆன் பண்ணிக்கிட்டு ஹாலுக்கும் கிட்சனுக்கும்

நடந்துகிட்டே சீரியலையும்

மிஸ் பண்ணாம……

தோசையும் கருகாம எடுக்கறதுல

பெண்களோட திறமை

இருக்கே….

**@ajay_aswa**

‘ஜீபூம்பா’ என மந்திரம் கூறி சீரமைப்பு

பணிகளை நடத்த முடியாது – முதல்வர் பழனிசாமி #

சரி அம்மா ஆட்சி அம்மா ஆட்சின்னு சொல்லியாவது பணிகளை நடத்துங்களேன் சார்..

**@PEETER_MAMA**

இந்த மழை நேரத்துல பஸ்ல போகும்போது எஞ்சின் மேல உக்காந்து போற சுகம் இருக்கே…

**@indhiratweetz**

“இவ்வளவு நேசத்திற்கு நான் தகுதியானவள் தானா?“ என ஒரு பெண்ணை ஆச்சர்யப்பட வைக்கும் தருணத்தில் ஆணின் நேசம் முழுமை அடைகிறது.

**@kathir_twits**

ஆட்சியாளர்களுக்கு மக்கள் தேவை என்றால் விலை பேசிவிடுவார்கள் , மக்களுக்கு ஆபத்து என்றால் யாரும் திரும்பி கூட பார்க்க மாட்டார்கள் என்பதை உணர்த்தி சென்றுவிட்டது கஜா புயல் !

**@vananm41**

விடுமுறை தின விடியல்

சோம்பேறித்தனம் அற்றது

**@vivika suresh**

‘மனசுல எதயுமே மறச்சு வச்சுக்க மாட்டேன் அப்டியே பேசிடுவேன்’னு அடிக்கடி சொல்றவன வழியில பார்த்தேன்

“சும்மா ஒரு வேலயா வந்தேன்’ட்டு போறான்

#ரைட்றா..

**@itzramguru**

குப்பையை

வெளியில் கொட்டாமல்

உள்ளுக்குள்ளேயே

கொட்டிக்கொட்டி

கடைசிவரை

குப்பைமேட்டைச் சுமந்தே

நாறிக்கிடக்கிறது

வாழ்க்கை ….

**@DD_Darls**

என்னதா பெரிய சம்பாத்தியக்காரனா இருந்தாலும் மக்க மனுசர சம்பாதீக்கனும் ,இல்லேனா ஆபத்து காலத்துல அம்புட்டும் அடிச்சுகிட்டு போய் அழிஞ்சாலும் மக்க மனுசர் உதவு செய்வாங்க பிழைக்க..

#இயற்கைசீற்றங்கள்

**@Baskar M**

ஓட்டுக்குப் பணம் வாங்காதே எனச் சொல்லும் ஒருவனும் இங்கு ஏழையில்லை

**@vivika suresh**

பெண்களுக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய அநியாயம்

நல்லா ஆரோக்கியமா இருக்க பெண்களயும் வயசான பெருசுங்க மாதிரி நினச்சு பஸ்ல உக்கார இடம் கொடுக்கிறது

#இந்த ஆம்பளைங்களே இப்டி தான்

**@nandhu_twitts**

குழந்தைக்கு இரண்டு பேரு வர்ற மாதிரி வச்சிட்டு..

கடைசி வரைக்கும் ஒரே பேர சொல்லி கூப்பிடுவதும் தேவையில்லாத ஆணி தான்..!!

**@pakka_tamilan**

நம் தவறை மன்னித்து விடுபவர்களை விட அதை சுட்டி காட்டுபவர்களே இங்கு அதிகம் தேவை தவறை அந்த நொடியே திருத்தி கொள்வதற்க்கு.!

**@itzkarthik_v**

ஊழலை தடுப்பதற்காக கொடுக்கப்பட்ட கசப்பான மருந்து பணமதிப்பிழப்பு நடவடிக்கை – பிரதமர் மோடி

அதற்காக மக்கள் உங்களுக்கு இனிப்பான விசம் கொடுப்பாங்க தேர்தல் முடிவுகளில் தெரியும்…

– லாக் ஆஃப்!�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share