Video: கேப்டன் வழியில் களமிறங்கி… அவருக்கு இறுதி மரியாதை செய்த ரசிகர்கள்!

Published On:

| By Manjula

சென்னை கோயம்பேட்டில் அமைந்திருக்கும் தேமுதிக அலுவலகத்தில் குண்டுகள் முழங்க, முழு அரசு மரியாதையுடன் கேப்டன் விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இறுதிச்சடங்கில் 2௦௦ பேருக்கு மட்டுமே அனுமதி என்பதால் தேமுதிக அலுவலகத்திற்கு வெளியே 8 எல்ஈடி திரைகள் அமைக்கப்பட்டு, அதில் அவரின் இறுதிச்சடங்கு நிகழ்வுகள் ஒளிபரப்பு செய்யப்பட்டன.

முன்னதாக இறுதி ஊர்வலத்தின் போது தீவுத்திடல் தொடங்கி, கோயம்பேடு வரை சாலையின் இருபுறங்களிலும் பொதுமக்கள் அலைகடலென திரண்டு அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

 

சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட கேப்டன் விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தில் பொதுமக்கள் நடந்தும், ஓடியும் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

வயது பேதமின்றி சிறு குழந்தைகள் தொடங்கி வயது முதிர்ந்த பெரியவர்கள் வரை, கேப்டனின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்திய காட்சி காண்பவர் அனைவரையும் உருக வைத்தது.

இதற்கிடையில் ஊர்வலம் சென்ற வழியில் கேப்டனின் பாணியில் அவரின் ரசிகர்கள், பொதுமக்களுக்கு உணவு வழங்கி பசியாற்றிய காட்சிகள் தற்போது வெளியாகி இருக்கின்றன.

இதைப்பார்த்த மக்கள், ”கேப்டன் பாணியில் அவரின் ரசிகர்களும் நடந்து கொள்கின்றனர். இதுதான் நாம் அவருக்கு செய்யும் மரியாதை,” என பாராட்டி வருகின்றனர்.

பசியால் யாரும் வாடக்கூடாது என நினைத்த கேப்டன் கடைசி வரை அதற்காக பாடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

-மஞ்சுளா 

அரசு மரியாதையுடன் விஜயகாந்த் உடல் நல்லடக்கம்!

பொதுமக்கள் கண்ணீர் வெள்ளத்தில்… நீந்தி செல்லும் ‘பொன்மன செல்வன்’ விஜயகாந்த்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share