பள்ளி சீரமைக்கும் பணியை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்: காரணம் என்ன?

Published On:

| By Selvam

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி சீரமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியம், சதாகுப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட அந்தோணியார்புரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு தேவாலயம் அருகில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

இந்த நிலையில் பள்ளியில் சீரமைக்கும் பணி நேற்று தொடங்கியது. அதன்படி பள்ளி முன்பகுதியில் இருக்கக்கூடிய சிலாப் மற்றும் பள்ளியின் மேல்பகுதியில் உள்ள சிமென்டு காரைகளை பெயர்த்து புதிதாக ஓடுகள் வைக்கப்படுவதற்காக பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால் ஓடுகள் தரமானதாக இல்லை என்றும், இதைப் பயன்படுத்துவதால் மீண்டும் பள்ளி கட்டடம் மழை பெய்தால் ஒழுகக்கூடிய சூழல் ஏற்படும் என்று கூறி அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பள்ளி சீரமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கட்டடம் கட்டப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால் கட்டடத்தில் மாணவர்கள் அமர்ந்து படிக்க முடியவில்லை. மேலும் அவ்வப்போது மேல் சுவர்கள் இடிந்து விழுந்து மாணவ-மாணவிகள் மட்டுமல்லாமல் ஆசிரியர்களும் அடிக்கடி காயம் அடைகின்றனர். எனவே பழுது பார்ப்பதை நிறுத்திவிட்டு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோஷங்களை எழுப்பினர்.

ADVERTISEMENT

இதனையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இந்த பணிகள் நிறுத்தப்படும் என்று கூறினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ராஜ்

ADVERTISEMENT

சண்டே ஸ்பெஷல்: எடையைக் குறைத்த பிறகு உணவுக்கட்டுப்பாடும் உடற்பயிற்சியும் ஆயுள் முழுக்க அவசியமா?

சிவனேன்னு ஒரு சிக்ஸர்: அப்டேட் குமாரு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share