கேப்டன் விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் தற்போது கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது.
நேற்று (டிசம்பர் 28) காலமான தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்தின் பூதவுடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டு இருந்தது.
இன்று(டிசம்பர் 29) மதியம் 2.51 மணியளவில் தீவுத்திடலில் இருந்து கோயம்பேடு தேமுதிக அலுவலகம் நோக்கி விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.
கேப்டன் விஜயகாந்தின் உடலுக்கு வழிநெடுகிலும் உள்ள மக்கள் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தி, பிரியாவிடை அளித்து வருகின்றனர்.

சாலையின் இருபுறமும் ஏராளமான பொதுமக்கள்,தொண்டர்கள் நின்று அவருக்கு பிரியாவிடை அளித்து வருகின்றனர். இதனால் ஊர்வலம் செல்லும் சாலையெங்கும் மக்கள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளது.
தற்போது விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் பச்சையப்பன் கல்லூரி, அமைந்தகரை, அண்ணா ஆர்ச் தாண்டி கோயம்பேடு நோக்கி சென்று கொண்டுள்ளது.
வழியெங்கும் மக்கள் வீட்டின் மாடிகள் மற்றும் ஆங்காங்கு உள்ள மேம்பாலங்கள் மேல் நின்று மலர் தூவி அவரை வழியனுப்பி வைக்கின்றனர்.
அவரோட முகத்தை பார்க்க முடியவில்லை அவரின் ஊர்வலத்தை மட்டும் பார்க்கும் முடிஞ்சது… போயிட்டு வா தலைவா 😭😭😭#RIPVijayakanth #RIPCaptain pic.twitter.com/5RyBfCuBlM
— சொல்லக்கூடாதாம் ⭐ (@Sollakudatham) December 29, 2023
விஜயகாந்த் இறுதி ஊர்வலம் செல்லும் பூந்தமல்லி சாலையை தவிர்க்குமாறு போலீசார் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.
தேமுதிக அலுவலகத்தில் நடைபெறும் இறுதிச்சடங்கு நிகழ்வில் கலந்து கொள்ள, மொத்தம் 200 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
–மஞ்சுளா
விஜயகாந்தின் இறுதி ஊர்வலம்: ஒலி பெருக்கியில் உருக்கமாக வேண்டுகோள் விடுத்த பிரேமலதா
தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் அடக்கம் : மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றம்!
