ஒவ்வொரு ஆண்டும் முக்கிய நாட்கள் மற்றும் பண்டிகைகளை பொது விடுமுறை நாட்களாக அறிவித்து பட்டியல் வெளியிடுவது தமிழ அரசின் வழக்கம்.
அதன்படி 2025 ஆண்டுக்கான பொது விடுமுறை பட்டியலை தமிழ்நாடு அரசு இன்று(நவம்பர் 22) வெளியிட்டுள்ளது.
ஆங்கிலப் புத்தாண்டு ( 1-1-2025), பொங்கல் (14-1-2025), திருவள்ளுவர் தினம் (15-1-2025), உழவர் தினம் (16-1-2025), குடியரசு தினம் (26-1-2025), தைப்பூசம் (11-2-2025), தெலுங்கு வருடப் பிறப்பு (30-3-2025), ரம்ஜான் (31-3-2025),
மகாவீரர் ஜெயந்தி (10-4-2025), தமிழ்ப் புத்தாண்டு/ அம்பேத்கர் பிறந்த தினம் (14-4-2025), புனித வெள்ளி (18-4-2025), மே தினம் (1-5-2025), பக்ரீத் (7-6-2025) மொகரம் (6-7-2025), சுதந்திர தினம் (15-8-2025), கிருஷ்ண ஜெயந்தி (16-8-2025), விநாயகர் சதுர்த்தி (27-8-2025),
மிலாது நபி (5-9-2025), ஆயுத பூஜை (1-10-2025), விஜயதசமி (2-10-2025), காந்தி ஜெயந்தி (2-10-2025), தீபாவளி (20-10-2025), மற்றும் கிறிஸ்துமஸ் (25-12-2025)ஆகிய 23 நாட்கள் பொது விடுமுறைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
மேலும் 1-4-2025 வங்கிகளின் ஆண்டு கணக்கு முடிவை முன்னிட்டு தமிழ்நாட்டிலுள்ள வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டும் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
கிண்டி மருத்துவரை தாக்கிய விக்னேஷுக்கு ஜாமீன் மறுப்பு!
அதானியை அமெரிக்காவிடம் ஒப்படைப்பதை தவிர வேறு வழி இல்லையா? 1997 ஒப்பந்தம் சொல்வது என்ன?