தமிழகத்தில் 10, 11 ,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் எப்போது தொடங்கும் என்ற விவரத்தை இன்று காலை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரையும், பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு மே 9ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரையும், பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரையும் பொதுத் தேர்வு நடைபெறும் என்று அறிவித்தார். எந்தெந்த பாடத்திற்கு எந்தத் தேதியில் தேர்வு நடைபெறும் என்பது குறித்த விரிவான அட்டவணை விரைவில் வெளியாகும் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை அரசுத்தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.
**பத்தாம் வகுப்பு**
மே 6 – தமிழ்
மே 14 – விருப்ப மொழித்தாள்
மே 18 – ஆங்கிலம்
மே 21 – தொழில்முறை கல்வி
மே 24 – கணிதம்
மே 26 – அறிவியல்
மே 30 – சமூக அறிவியல்
**பதினோராம் வகுப்பு**
மே 10 – மொழிப்பாடம்,
மே 12 – ஆங்கிலம்
மே 16 – தாவரவியல், வரலாறு, உயிரியல், வணிக கணிதம், புள்ளியியல், அடிப்படை எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், அடிப்படை எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், அடிப்படை சிவில் இன்ஜினியரிங், அடிப்படை ஆட்டோ மொபைல் இன்ஜினியரிங், அடிப்படை மெக்கானிக்கல் இன்ஜினியரிங், டெக்ஸ் தொழில்நுட்பம், அலுவலக மேலாண்மை மற்றும் செயல்முறைகள்
மே 19 -வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல்
மே 25 – கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல், நர்சிங், ஆடை வடிவமைப்பு மற்றும் டெக்ஸ்டைல்ஸ், உணவு சேவை மேலாண்மை, விவசாய அறிவியல்.
மே 27- புள்ளியியல், அரசியல் அறிவியல், உயிரி வேதியியல், கணினி அறிவியல், கணித பயன்பாடுகள், மனை அறிவியல்.
மே 31-இயற்பியல், பொருளாதாரவியல், கணினி தொழில்நுட்பம்
**பனிரெண்டாம் வகுப்பு**
மே 5 – மொழிப்பாடம்
மே 9 – ஆங்கிலம்
மே 11 – தொடர்பு ஆங்கிலம், இந்திய கலாசாரம் மற்றும் கொள்கைகள், கம்பியூட்டர் அறிவியல், கம்பியூட்டர் பயன்பாடுகள், உயிர் வேதியியல், சிறப்புத் தமிழ், மனை அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளியியல்.
மே 13 – வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல்
மே 17 – கணக்கு, விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல், உணவு மற்றும் ஊட்டச்சத்து இயல், ஆடை வடிவமைப்பு மற்றும் டெக்ஸ்டைல்ஸ், உணவு சேவை மேலாண்மை, விவசாய அறிவியல், நர்சிங்.
மே 20 – இயற்பியல், பொருளாதாரம், கணினி தொழில்நுட்பம்
மே 23 – உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல், அடிப்படை எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், அடிப்படை எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், அடிப்படை சிவில் இன்ஜினியரிங், அடிப்படை ஆட்டோ மொபைல் இன்ஜினியரிங், அடிப்படை மெக்கானிக்கல் இன்ஜினியரிங், டெக்ஸ் தொழில்நுட்பம், அலுவலக மேலாண்மை மற்றும் செயல்முறைகள்.
மே 28 – தொழிற்பாடத் தேர்வு.
10,11,12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் காலை 10 மணிக்குத்தொடங்கி மதியம் 1.15 மணி வரை நடைபெறும். மாணவர்கள் கேள்வித்தாள் படிப்பதற்கு 10 நிமிடம், வினாத்தாளில் விவரங்களை சரிபார்த்து பதிவு செய்ய 5 நிமிடம் என 15 நிமிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
**-வினிதா**
