மீண்டும் வந்த பப்ஜி!

Published On:

| By Balaji

பப்ஜியின் மறு உருவமான Battlegrounds Mobile India என்ற வீடியோ கேம் விளையாட்டுக்கான முன்பதிவு கூகுள் ப்ளேஸ்டோரில் தொடங்கியுள்ளது.

இந்தியாவில் பப்ஜி விளையாட்டுக்கு சிறுவர்களும், பள்ளி, கல்லூரி மாணவர்களும் அடிமையானதால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டன. பப்ஜி விளையாடுவதற்காக, வீட்டில் செல்போன் கேட்டும் பல உயிரிழப்புகள் ஏற்பட்டதால், அனைவரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையில் இந்திய அரசு பாதுகாப்பு காரணத்திற்காக 200க்கும் அதிகமான சீன செயலிகளை தடை செய்தபோது, பப்ஜி செயலியும் தடை செய்யப்பட்டது.

இந்நிலையில், Krafton நிறுவனம் Battlegrounds Mobile India என்ற கேம்மை உருவாக்கி, அதற்கான முன்பதிவை தொடங்கியுள்ளது.

தற்போது பப்ஜி கேம்-ஐ உருவாக்கிய தென் கொரியாவின் Krafton நிறுவனம், ,முன்பு சீனாவின் டென்சென்ட் நிறுவனத்தின் வாயிலாக பப்ஜி கேம்மை செயல்பாட்டுக்கு கொண்டு வந்த நிலையில், தற்போது நேரடியாக இந்தியாவில் பப்ஜி கேம்-ஐ புதிய பெயரில் அறிமுகம் செய்துள்ளது.

இந்த ஆப் இன்னும் முழுவதுமாக செயல்பாட்டுக்கு வரவில்லை. ஆனால் அதை டவுன்லோடு செய்வதற்கான முன்பதிவு தற்போது வந்துள்ளது. முன்பதிவு செய்ய கூகுள் ப்ளே ஸ்டோர் சென்று Battlegrounds Mobile India என்ற கேமை தேடி, அதில் முன்பதிவு என்ற Tab-ஐ அழுத்தி பதிவு செய்ய வேண்டும்.

முன்பதிவு செய்தவர்களுக்கு கேம் விளையாடும்போது பல்வேறு ரிவார்டுகள் வழங்கப்படும். ரீகான் மாஸ்க், ரீகான் அவுட்ஃபிட், 300 ஏஜி போன்ற ரிவார்டுகள் கிடைக்கும் என்றும், முன்பதிவு இந்தியாவில் உள்ளவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மட்டுமே இந்த கேம்மை விளையாடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பப்ஜியில் இருந்த சகல வசதிகளும் இதில் இருக்கும். மேலும் பயனர்களின் தனிநபர் தகவல்களை பாதுகாக்க இதில் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செயலி எப்போது தொடங்கப்படும் என்ற அறிவிப்பை KRAFTON நிறுவனம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

**-வினிதா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share