தாய்வீடு: திமுகவில் இணையும் மதுரை மாவட்ட பாஜக தலைவர் சரவணன்?

Published On:

| By Selvam

மதுரையில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசப்பட்டதற்கு, மதுரை மாவட்ட பாஜக தலைவர் சரவணன் நிதி அமைச்சரை சந்தித்து வருத்தம் தெரிவித்ததுடன் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் மூன்று பேர் வீர மரணம் அடைந்தனர்.

ADVERTISEMENT

அதில் மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியைச் சேர்ந்த லட்சுமணன் உயிரிழந்தார். அவரது உடல் காஷ்மீரில் இருந்து நேற்று மதுரை விமான நிலையத்திற்கு வந்தது.

madurai bjp saravanan

அவரது உடலுக்கு தமிழக அரசு சார்பில் நிதியமைச்சர் பி.டிஆர் பழனிவேல் தியாகராஜன் மரியாதை செலுத்த சென்றார். அப்போது அவருக்கும், பாஜகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

ADVERTISEMENT

இந்தநிலையில், பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சென்ற வாகனம் மீது பாஜக-வினர் காலணி வீசினர். இந்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து பாஜகவினர் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து மதுரை மாவட்ட பாஜக தலைவர் சரவணன், பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை நேற்று இரவில் சந்தித்து நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்தார்.

ADVERTISEMENT

தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, “பாஜகவில் சிறுபான்மையினருக்கு எதிரான போக்கு உள்ளது. இருப்பினும் மன உளைச்சலுடன் தான் பாஜகவில் பயணித்துக்கொண்டு இருக்கிறேன்.

அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு நேர்ந்த சம்பவத்தால் தூக்கம் வரவில்லை. அதனடிப்படையில் தான் இரவில் அவரை சந்தித்து என்னுடைய வருத்தத்தை தெரிவித்தேன்.

பாஜகவில் தொடர்வதில் எனக்கு விருப்பம் இல்லை. காலையில் என்னுடைய ராஜினாமா கடிதத்தை அனுப்ப போகிறேன். பாஜகவில் மத அரசியல் கடுமையாக இருக்கிறது. அனைத்து மக்களுக்கும் பொதுவான மருத்துவராகவே நான் இருக்க விரும்புகிறேன்.

திமுகவில் இணைவீர்களா என்று பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, திமுகவில் சேர்ந்தால் தவறு இல்லை ஏனென்றால் திமுக எனது தாய் வீடு.” என்றார்.

செல்வம்

சென்னையில் பட்டப் பகலில் வங்கியில் கொள்ளை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share