வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி60 ராக்கெட் : இந்தியா சாதனை!

Published On:

| By christopher

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் ஏவுதளத்தில் இருந்து, பிஎஸ்எல்வி சி60 ராக்கெட் வெற்றிகரமாக இன்று இரவு 10 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.

இந்திய விண்​வெளி ஆய்வு நிறு​வனம் (இஸ்ரோ), எதிர்கால தேவையை கருத்​தில் கொண்டு பாரதிய அந்தரிக் ஷா ஸ்டேஷன் எனும் இந்திய ஆய்வு மையத்தை 2035-ம் ஆண்டுக்​குள் விண்​வெளி​யில் நிறுவ திட்​ட​மிட்​டுள்​ளது. அதற்கான முன்​த​யாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

அதன்​ஒரு​பகு​தியாக ஸ்பேடெக்ஸ் (SPADEX-Space Docking Experiment) எனப்படும் ஸ்பேஸ் டாக்கிங் திட்டத்தின்​கீழ் விண்​ணில் விண்​கலன்களை ஒருங்கிணைக்​கும் பணிகள் மேற்​கொள்​ளப்பட உள்ளன.

இதற்காக ஸ்பேடெக்ஸ் ஏ மற்றும் ஸ்பேடெக்ஸ் பி என 2 விண்​கலன்களை தனியார் நிறுவன பங்களிப்புடன் இஸ்ரோ வடிவ​மைத்​துள்ளது. இந்த இரட்டை விண்​கலன்கள் தலா 220 கிலோ எடை கொண்​ட​வை​.

இவை பிஎஸ்​எல்வி சி-60 ராக்​கெட் வாயிலாக ஸ்ரீஹரி​கோட்​டா​வில் உள்ள ஏவுதளத்​தில் இருந்து இன்று இரவு சரியாக 10 மணிக்கு விண்ணில் செலுத்​தப்பட்டது.

முன்னதாக ராக்கெட் ஏவுதலுக்கான 25 மணி நேர கவுன்ட்​ட​வுன் நேற்று இரவு 8.58க்கு தொடங்​கியது. தொடர்ந்து எரிபொருள் நிரப்புதல் உட்பட இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வந்தது. இன்று இரவு 9.58க்கு விண்ணில் ஏவப்பட இருந்த நிலையில் செயற்கைக்கோள்கள் குறுக்கீடு காரணமாக 2 நிமிடங்கள் தாமதமாக 10 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டுள்ளது.

பிஎஸ்​எல்வி சி-60 ராக்​கெட் மூலம் ஏவப்பட்டுள்ள விண்​கலன்களும் விண்ணில் 20 கிமீ தூரத்தில் வெவ்வேறு திசையில் நிலைநிறுத்தப்படும். சில மாதங்​களுக்கு பிறகு அவற்றை ஒன்றிணைக்​கும் பணிகள் மேற்​கொள்​ளப்​படும்.

இதற்கிடையே இரு செயற்கைக்கோள்களை அவற்றின் இலக்கு சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்துவதற்கு பிஎஸ்எல்வி சி60 வெற்றிகரமாக ஏவப்பட்டதாகவும், அதற்காக விஞ்ஞானிகளை பாராட்டுவதாகவும் இஸ்ரோ தலைவர் எஸ் சோம்நாத் செய்தியாளர்களுக்கு அறிவித்தார்.

இதுவரை அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் மட்டுமே செயற்கைக்கோள் இணைப்பு சோதனையை விண்வெளியில் வெற்றிகரமாக நடத்தி முடித்த நாடுகளாக உள்ளன.

இந்த வரிசையில் இந்தியா தற்போது 4வது நாடாக வரலாற்றில் இடம்பெற்றுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

ஆளுநர் பதவி முக்கியம் போல : அப்டேட் குமாரு

டிஜிட்டல் திண்ணை: அண்ணாமலைக்கு அமித் ஷா போட்ட ஒன்லைன் ஆர்டர்! அதிமுகவை பாராட்டிய பின்னணி!

லேசர் வெளிச்சத்தில் மின்னும் வள்ளுவர் சிலை… கண்ணாடி பாலத்தை திறந்து வைத்தார் ஸ்டாலின்

”சீமானுக்கு நிச்சயம் தண்டனை வாங்கி கொடுப்பேன்” : நீதிமன்றத்தில் ஆஜரான வருண்குமார் ஐபிஎஸ் உறுதி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share