நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் மீது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்; ஜிஆர் சுவாமிநாதனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று (டிசம்பர் 5-ந் தேதி) ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.சென்னையில் உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கலந்து கொண்டார். அப்போது, ஜிஆர் சுவாமிநாதனுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்தப் போராட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய பெ.சண்முகம், ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவால் மத கலவரம் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது; அவரது பாரபட்சமான தீர்ப்புகளை உத்தரவுகளை ஏற்க முடியாது; ஜிஆர் சுவாமிநாதன் மீது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்; ஜிஆர் சுவாமிநாதனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றார்.
இதேபோல தமிழகத்தின் பல பகுதிகளிலும் நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனுக்கு எதிராக இன்று போராட்டங்கள் நடைபெற்றன.
