வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், அவாமி லீக் கட்சியின் எம்.பி-யுமான மஷ்ரஃப் பின் மோர்தசா வீட்டிற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.
வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், அசாதாரண சூழல் நிலவுகிறது. இதனால் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா அங்கிருந்து தப்பி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார்.
தலைநகர் டாக்காவில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் புகுந்த மாணவர்கள் அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தினர். மேலும், அவாமி லீக் கட்சி அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளை குறிவைத்து மாணவர்கள் தாக்கி வருகின்றனர்.
இந்தநிலையில், நரில் தொகுதி அவாமி லீக் எம்.பி-யும், முன்னாள் கிரிக்கெட் கேப்டனுமான மஷ்ரஃப் பின் மோர்தசா வீட்டிற்குள் புகுந்த போராட்டக்காரர்கள் அவரது வீட்டிற்கு தீ வைத்தனர். இந்த சம்பவம் நடந்தபோது, மஷ்ரஃப் பின் மோர்தசா அவரது வீட்டில் இருந்து தப்பிச்சென்றார்.
டி20, ஒருநாள், டெஸ்ட் என 117 போட்டிகளில் மஷ்ரஃப் பின் மோர்தசா வங்கதேச அணியின் கேப்டனாக இருந்துள்ளார். 36 டெஸ்ட் மேட்ச், 220 ஒருநாள் போட்டிகள், 54 டி20 போட்டிகளில் இவர் விளையாடியுள்ளார்.
கடந்த 2018-ஆம் ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த மஷ்ரஃப் பின் மோர்தசா, அவாமி லீக் கட்சியில் இணைந்தார். தொடர்ந்து நரில் தொகுதியில் இரண்டு முறை போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
“ஷேக் ஹசீனா இனி வங்கதேசம் செல்ல மாட்டார்”: மகன் சஜீப் வாசெத் ஜாய் பேட்டி!
Share Market: தொடர் சரிவில் பங்குச்சந்தை: ஃபோகஸ் செய்ய வேண்டிய பங்குகள் என்னென்ன?