தர்மேந்திர பிரதானுக்கு எதிராக தொடர் போராட்டம் : திமுக முக்கிய அறிவிப்பு!

Published On:

| By christopher

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக திமுக உள்ளடங்கிய மாணவர் கூட்டமைப்பு மற்றும் காங்கிரஸ் போராட்டம் அறிவித்துள்ளது. DMK Protest against Dharmendra Pradhan

தமிழகம் மும்மொழிக் கொள்கையை ஏற்றால் மட்டுமே ரூ.2152 கோடி கல்வி நிதியை விடுவிப்போம் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியது தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது மறைமுகமாக இந்தியைத் திணிப்பது என பாஜக தவிர மற்ற தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

மாணவர்கள் நலன் கருதி கல்வி நிதியை விடுவிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். ஆனால், அரசியல் காரணங்களுக்காக குறுகிய பார்வையுடன் தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதாகவும், கல்வியை அரசியலாக்க வேண்டாம் எனவும் தர்மேந்திர பிரதான் பதில் கடிதம் எழுதினார். தற்போது மும்மொழிக் கொள்கை விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது.

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! DMK Protest against Dharmendra Pradhan

இந்த நிலையில் திமுக மாணவர் அணியின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், தேசிய கல்விக் கொள்கையையும், மும்மொழிக் கொள்கையையும் ஏற்றுக் கொண்டால் தான், தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய கல்விக்கான நிதியை தருவோம் என ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆணவத்தோடு பேசியிருக்கிறார். DMK Protest against Dharmendra Pradhan

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழ்நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டுமென்றும், அவர் பேசிய வார்த்தைகளை திரும்பப் பெற வேண்டுமென்றும், கல்வித்துறைக்கான நிதியை விடுவிக்கும் வரையில் கழக மாணவர் அணி சார்பில் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கவும் இக்கூட்டம் தீர்மானிக்கறது.

அதனைத்தொடர்ந்து, மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு – தமிழ்நாடு (FSO-TN) கூட்டமைப்பின் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தின்படி, மொழிப்போருக்கு வித்திடும் வகையில் செயல்படும் ஒன்றிய பா.ஜ.க அரசை கண்டித்து, வரும் 25ஆம் தேதி அன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் நடைபெறும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக மாணவர் அணி, மாணவர் சேனையுடன் பெருந்திரளாக கலந்துக் கொண்டு, ஆர்ப்பாட்டம் பெருவெற்றியடைய இக்கூட்டம் உறுதி ஏற்கிறது” என்று தெரிவித்துள்ளது.

கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்! DMK Protest against Dharmendra Pradhan

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்திற்கு நிதி வழங்க மறுக்கிற ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வரும் பிப்ரவரி 28 அன்று சென்னை வருகிற போது அவருக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் கருப்புக் கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள். தமிழகத்தின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் வெளிப்படுத்துகின்ற வகையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் அமைய வேண்டும்” என்று அறிவித்துள்ளார். Protest against Dharmendra Pradhan

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share